கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?


எம்.எல்.ஏக்கள் சம்பளம்போல் உயர்த்திய பேருந்து கட்டணம், டீசல் விலைபோல் குறைத்த தமிழக அரசு

எம்.எல்.ஏக்கள் சம்பளம்போல் இரு மடங்கு உயர்த்திய பேருந்து கட்டணம்…டீசல் விலைபோல் பைசாவில் குறைத்த தமிழக அரசு : சபாஷ்..பாஜக வரவேற்பு!

பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பொதுமக்களும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கட்டண குறைப்பு என அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

70 சதவிகிதம் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைந்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஏற்புடையதல்ல, கண்துடைப்பு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

 

 

கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பேருந்து கட்டண குறைப்பு வரவேற்கத்தக்கது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மேலும்,தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என கூறுவது தவறு. மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளை திரும்பப்பெறும் நிலையில் தமிழக அரசு செயல்படுகிறது எனவும் தமிழிசை கூறியுள்ளார். மத்திய அரசின் நிதிகளை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் தமிழக அரசு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *