கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?


பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடரும் மாணவர்கள் போராட்டம்


தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டண உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு பஸ் பாஸ் நீடிக்கும் எனவும் அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

ஆனாலும் மாணவர்கள் கட்டண உயர்வை குறைக்காமல் திரும்ப மாட்டோம் என கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

* ஈரோட்டில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம், போக்குவரத்து பாதிப்பு

*பேருந்து கட்டணம் தொடர்பான மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரிக்கு வரும் ஞாயிறு வரை விடுமுறை விடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

* புதுக்கோட்டை மன்னர் அரசு கலை கல்லூரிக்கும் வரும் ஞாயிறு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

* திண்டுக்கல்: எம்.வி.எம் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

* சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

* புதுக்கோட்டை: இச்சடியில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; மறியலால் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* கோவை: பேருந்து கட்டண உயர்வை கண்டித்து காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

* காரைக்குடி பள்ளத்தூர் சீதாலெட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகள், தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2- வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* சிவகங்கை: காரைக்குடி அமராவதி புதூர் தனியார் பொறியியல் கல்லூரி் மாணவர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, காரைக்குடி – தேவக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.

* உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மதுரை சவுராஸ்ட்ரா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

* கும்பகோணம் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அரசு தன்னாட்சி கல்லூரி மாணவ, மாணவிகள் 2000 பேர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

* புதுச்சேரி: பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பேருந்து நிலைய வாயில் முன்பு மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் கைது

* நாகை: தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாகை பாரதிதாசன் பல்கலைகழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்ட வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

* நெல்லை: சங்கரன் கோவிலில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *