கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அடித்தாலும் விலகாது , அனைத்தாலும் நிற்காது?


ஜெயலலிதா பிறந்தநாள் அன்று டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி : தங்க தமிழ்ச்செல்வன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் டி.டி.வி.தினகரன் புதியக் கட்சி தொடங்குவார் என்று தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் ஏற்கனவே தேர்தல் ஆணையம் ஒதுக்கிய அ.தி.மு.க அம்மா என்ற பெயரில் பேரவை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை ஏற்க மறுத்த டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்குவது எத்தனை கஷ்டம் என்பது தனக்கு தெரியும் என்று கூறினார்.

 

இதனைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் தான் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் டி.டி.வி. தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் தேனியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது: தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ரூ.7000 சம்பளம் வாங்குபவர்கள் மாதம் ரூ.3000 த்தை பேருந்து கட்டணத்திற்காக கொடுத்துவிட்டு எப்படி வாழ்வது என்று கேள்வி எழுப்பினார். இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் பா.ஜ.கவுக்கு அடிமையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், தோல்வியை ஏற்க மறுத்துள்ள அவர்கள் மீசையில் மண்ணு ஒட்டினாலும் கூட கீழே விழவில்லை என்று நடிக்கின்றனர் என்றும் சாடினார். ஓ.பி.எஸ்சை அமைச்சராக்கி, முதலமைச்சராக்கி அழகு பார்த்தது டி.டி.வி.தினகரன்தான் என்பதை ஓ.பி.எஸ் மறுக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று இன்னும் பத்து நாட்களில் தீர்ப்பு வரும் வந்த பிறகு நாங்கள் சட்டமன்றம் செல்வோம் தீர்ப்புக்கு பிறகு நாம்தான் அ.தி.மு.க, நாம்தான் ஆட்சி, இரட்டை இலை நமக்குதான் என்று கூறிய அவர் பொறுமையாக இருக்குமாறும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதுவரையிலும் டி.டி.வி.தினகரன் அணியானது அ.தி.மு.க அம்மா என்ற பெயரில் செயல்படும் என்று கூறிய அவர் மெஜாரிட்டி ஜாதி உள்ளவர்களுக்கு பொருப்புகளை வழங்கி பொருப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் புதிய பொருப்பாளர்கள் மாநில, மாவட்டம், ஒன்றிய மற்றும் நகர வாரியாக நியமிக்கப்படுவார்கள் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

மேலும், இன்னும் ஓரிரு மாதங்களில் டி.டி.வி.தினகரன் தொகுதி தொகுதியாக, ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே டி.டி.வி.தினகரனின் அ.தி.மு.க அம்மா அணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

அதோடுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை திரட்டி செயல் வீரர்கள் கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன்மூலம் டி.டி.வி.தினகரன் விரைவில் தனிக்கட்சி தொடங்குவார் என்பது உறுதியாகி உள்ளது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *