டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில்பாலாஜி கைது காரணம் என்ன?


கரூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு, சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.
கரூரில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் எம்ஜிஆர் பிறந்த தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு, வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்தில், அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதியவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் அதே இடத்தில் விளம்பரம் எழுதியதையடுத்து, அவர்களை போலீசார் விரட்டியதாக தெரிகிறது.

தகவலறிந்து சென்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏவான செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பலமுறை எச்சரித்தும் கலைந்து செல்லாததால், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *