டாய்லெட்டுக்கு பில் போட்ட கொடுமை.. அதுவும் ஜி.எஸ்.டி.,யோடு சேர்த்து !

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ருக்மணி அம்மாள் என்ற உணவகத்தில் போடப்பட்டுள்ள ஒரு பில் பார்க்கும்  அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்க செய்துள்ளது.

 

வழக்கமாக உணவகத்தில் உணவிற்கு பில் போட்டு பார்த்திருப்போம். ஆனால் டாய்லெட் என்று பில் போட்டு, அதில் எண்ணிக்கை ஒன்று என குறிப்பிட்டு பில் கொடுத்துள்ளார்களே அப்பப்பா..!! பார்க்கும் பொழுதே நாம் தமிழகத்தில் தான் இருக்கிறோமா அல்லது வேற்று மாநிலத்திற்கு உள்ளே நுழைந்து விட்டோமா என்று நினைக்க தோன்றுகிறது.

நம்ம ஊரு ஆட்களே நம்மை ஏமாற்றி பிழைத்தால், அடுத்தவன் பிழைக்க வந்தாலும் அதை விட ஒரு மடங்கு ஏமாற்றி பிழைக்க தானே பார்ப்பான்.

தற்போது சிறந்த சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், சுற்றுப்புறங்களை மேம்பட செய்யும் நோக்கத்தில், ‘துாய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இத்திட்டத்தில், திறந்த வெளி கழிப்பிட மற்ற நகர்கள் மற்றும் கிராமங் கள் அமைய வேண்டும் என்பதற்காக, கழிப்பிடம் இல்லா வீடுகளை கண்டறிந்து, அவர்கள் கழிப்பறை கட்டிக்கொள்ள பயனாளி ஒருவருக்கு ரூ. 20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

அதுமட்டும் அல்லாது சாலை ஓரங்களிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் செல்வோருக்காக ஆங்காங்கே கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. விரைவில் அனைத்து இடங்களிலும் இதனை காண முடியும்.

ஆனால் அதற்கு முன்னரே இது போன்ற சில வியாபாரக்கும்பல் அங்காங்கே முளைத்து கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. அவசரத்திற்கு போவதற்கு கூட ஒரு பில் அடித்து, அதில் பத்து ரூபாய் என்று போட்டு, ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து பதினொரு ரூபாய் வாங்கி உள்ளனர்.

இதனை வாங்கிய ஒருவர் பார்த்து விட்டு கண்ணீர் விடாத குறையாக அதனை புகைப்படம் எடுத்து மற்றவர்களும் பார்க்கும் வண்ணம் பகிர்ந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *