தினகரனின் பவரை உணர்ந்து ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்ஸை கழற்றி விட்ட மோடி……மீண்டும் சசிகலாவின் காலில் விழ இருக்கும் எடப்பாடி..சொன்னது யார் தெரியுமா?!


முதலமைச்சர் எடப்பாடி மீண்டும் சசிகலாவின் காலில் விழும் நேரம் வரும் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார். 
இது குறித்து அவர் கூறுகையில், எங்களுடைய அணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

காக்கி சட்டையை போட்டுக்கொண்டு அமைச்சர்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம். ஏனெனில் காலச்சக்கரம் மீண்டும் சுழலும். அமைச்சர் வேலுமணியின் பேச்சை கேட்டு கொண்டு செயல்படும் கோவை மாநகர காவல்துறை தெருவில் நிற்கும். 

நாங்கள் அனைவரும் சட்டையை பிடித்து உட்கார வைத்தவர்தான் தற்போதையை முதலமைச்சர் எடப்பாடி. இந்த முதலமைச்சர் மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும். அந்த சமயத்தில் இவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் அனைவரும் என்ன செய்வார்கள்? எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியையோ அல்லது ஓ.பி.எஸ்ஸையோ பிரதமர் மோடி தப்பித்தவறி கூட சந்திக்க மாட்டார். 

தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர் டி.டி.வி.தினகரன் தான் என்பதை மோடி உணர்ந்துவிட்டார். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் என்பது மிக குறைவு என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் கூறுவது முற்றிலும் பொய்.  

மீண்டும் மெரினா கூட்டம் போன்று மாணவர் பட்டாளமும், இளைஞர் பட்டாளமும் டி.டி.வி.தினகரனின் பின்னால் திரண்டால் அரசால் தாங்க முடியாது. அவர்களுக்கு துணிச்சல் இருந்தால் நாளைக்கே உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவியுங்கள். 
போயும் போயும் தந்தை பெரியார் விருதை கொண்டு போய் கீழ்த்தரமான அந்த பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*