கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அச்சு இல்லா சக்கரம் , அழகு காட்டும் சக்கரம் ?


பிரதமர் மோடி ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்தது ஏன்?


பிரதமர் மோடி ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்தது ஏன்? அரசு திட்டங்களில் கமிஷன், ஊழலால் மத்திய அரசு அதிர்ச்சி..

டெல்லி சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்க அனுமதி அளிக்காததற்கு காரணமாக அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் அடுக்கடுக்காய் வந்த குற்றச்சாட்டு காரணமாகத்தான் பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்ற பகீர் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

உண்மை நிலையை சொல்ல வேண்டும் என நினைத்த தம்பிதுரை, பன்னீர் செல்வத்திடம் கூறியது…

தற்போது உங்களது மகன்கள், மகள் மற்றும் சம்பந்தி, தம்பிகள், அவரது உறவினர்கள் மற்றும் கொங்கு மண்டல அமைச்சர் குறித்தும் பல்வேறு தொடர் புகார்கள் வந்துள்ளன.

அதனால் அவர்கள் நம்மை தள்ளி வைக்கப் பார்க்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பன்னீர்செல்வம் குறித்து, பிரதமர் அலுவலகத்துக்கு உளவுத்துறையினர் அதிர்ச்சி தகவல்களை கொடுத்துள்ளனர். அதில், பன்னீர்செல்வத்தின் மூத்த மகனான ரவீந்திரநாத் குமார் மற்றும் இளைய மகன் ஜெய பிரதீப் ஆகிய இருவரது பெயர்களிலும் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. குறிப்பாக ஜெயவந்த் என்டர்பிரைசஸ். எக்செலன்ட் மெரைன்லைன் ப்ரைவேட் லிமிடெட், திருப்பூரில் ஒரு நூற்பாலை, வாணி பேப்ரிக்ஸ், வாணி ஸ்பின்னர்ஸ். வாணி டெக்ஸ்டைல்ஸ், தேனியில் இயங்கி வரும் க்ளோபல் ஹோம் ரியாலிட்டீஸ், எச்எஸ்வி கார்ப்பரேஷன் சோலார், வில்லோ நெட் கார்ப்பரேசன், ஜெயவந்த் என்டர்பிரைசஸ், மேட்ரிக்ஸ் மீடியா டிசைன்ஸ் ப்ரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பன்னீரின் மகன்கள் பெயரில் இயங்கி வருகிறது.

மற்றும் அவரது மகள் கவிதா பானுவின் பெயரில் விஜயந்த் டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிடெட் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், மகள் நிர்வாகம் செய்யும் மருத்துவக் கல்லூரி மற்றும் பன்னீரின் அப்பா பெயரில் இயங்கும் ஓட்டக்காரத் தேவர் கல்வி அறக்கட்டளை பெயரில் பணத்தை வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பெற்றது, ஆகிய ஒட்டு மொத்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், உளவுத்துறை அதிகாரியான அசோக் பாத்தியா தலைமையில் 6 அதிகாரிகளிடம் பன்னீர்செல்வம் குறித்து விசாரிக்கச் சொன்ன மத்திய அரசு, தமிழகம் மற்றும் இந்தியாவிலுள்ள கர்நாடகா மற்றும் உபி மற்றும் பல்வேறு இடங்களில் பன்னீர் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள சொத்துகள் மற்றும் அவரது பினாமிகளின் பட்டியலை தயார் செய்து அவர்கள் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர் என்கிற விவரத்தினை மோடிக்கு அறிக்கையாக அனுப்பியுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் சில மாதங்களுக்கு முன்பே நடந்து விட்டது. அடுத்தபடியாக, வெளி நாடுகளிலிருந்து எந்தெந்த அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக எவ்வளவு பணம் சென்றது என்கிற விவரத்தையும் துல்லியமாக சேகரித்ததில் அதுகுறித்த தகவல்களைப் பார்த்ததும் ஆடிப்போனது பிரதமர் அலுவலகம்.

இதுகுறித்த விரிவான அறிக்கையை பிரதமருக்கு அனுப்புகையில் மத்திய அரசு அளிக்கும் நிதிகளை தமிழகத்தில் எப்படியெல்லாம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொண்டு பிரித்துக் கொண்டு அதை வெள்ளைப் பணமாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கினார்கள் என்கிற விரிவான அறிக்கையாக அனுப்பியுள்ளனர். இதற்கு பிறகு தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதிகளை முற்றிலும் நிறுத்திக் கொள்ளும் முடிவிற்கு வந்தது.

தமிழகத்தில் சில அமைச்சர்கள் குறித்த அறிக்கையை பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அனுப்பியது. மத்திய நிதித்துறையை சூடாக்கிய அந்த அறிக்கைக்குப் பிறகு தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில்லை என தீர்மானமாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னணியில்தான் மோடி பன்னீர்செல்வத்தை சந்திக்காமல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. தமிழகம் சார்பில் கேட்கப்பட்ட நிதிகளை ஒதுக்காமல் மவுனம் காத்தது மத்திய அரசு…

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *