கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?


மத்திய அரசை எதிர்க்கக் கூடிய ஆற்றல் டி.டி.வி.க்கே உண்டு : தங்கத்தமிழ்செல்வன்


“நாங்கள் 18 பேரும் இடைத்தேர்தலை சந்திப்போம்!”- தங்கத்தமிழ்செல்வன் பேட்டி

மதுரை மாநகர மாவட்ட தினகரன் அணி சார்பாக நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “உண்மையான அ.தி.மு.க நாம்தான். நமக்கே கூட்டம் கூடுகிறது. தி.மு.க ஆட்சியில் உலகத்தமிழ் மாநாடு நடத்துவதற்கு உலகத்தமிழ் மாநாட்டு அமைப்பு அனுமதி வழங்கவில்லை, அதற்குக் காரணம், கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம். அதுபோல் இவர்களும் தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள். ஜெயலிதா உயிரோடு இருக்கும்வரை இந்த அமைச்சர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. ஆனால், இப்போது உளறுகிறார்கள். பதவி போன நாங்கள் புலம்பியதே இல்லை. ஆனால் அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெயர் கூடத் தெரியாமால் புலம்புகிறார்கள்.

வயதில் நான் சிறியவன் என்பதாலே அன்றே ஜெயலலிதா கொடுத்த மாவட்டச் செயலாளர் பதவியை ஏற்கவில்லை. அதனால்தான் பன்னீர்செல்வம் அந்த பதவியை பெற்றார். அவரின் அனைத்து ஏற்றத்திற்கும் காரணம், தினகரனே என்பதை மறந்துவிட்டார். சசிகலாவால் பதிவியேற்ற எடப்பாடி ஒரு மாதத்திற்குள்ளே நன்றியை மறந்துவிட்டார்.

திகார் ஜெயிலில் தினகரனை பார்க்க சென்றபொழுது உளவுத் துறையின் மூலமாக என்னை மிரட்டினார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் பத்து நாட்கள் அங்கே தங்கியிருந்தேன். இனி 18 எம்.எல்.ஏ-க்களும் நீதிமன்றம் செல்லப்போவதில்லை, இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம். தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம் டி.டி.விக்கே வரவேற்பு கொடுக்கிறார்கள்.

ஆர்.கே.நகர் தேர்தலில் அவர்களிடம் இரட்டை இலை, கொடி இருந்தும், பணம் கொடுத்தும் வெற்றி பெற முடியவில்லையே, சுயேட்சையாக போட்டியிட்ட நாம்தான் வெற்றி பெற்றோம். சசிகலா.டி.டி.வி தினகரனுக்கு பதவி ஆசை இருந்திருந்தால் ஜெயலலிதா இருந்தபோதே எம்.எல்.ஏ-வாகியிருப்பார்கள்.

மத்திய அரசை எதிர்க்கக் கூடிய ஆற்றல் டி.டி.வி.க்கே உண்டு. ரஜினி, கமல் திரையில் நடிக்கக்கூடிய சக்தி குறைந்தவுடன் அரசியலுக்கு வருகிறார்கள்.2-ஜி வழக்கில் அம்பானிக்கும் தண்டனை கிடைக்கும் என்பதால்தான் தி.மு.கவினர் தண்டனையிலிருந்து தப்பினார்கள்” என்று அதிரடியாக பேசினார்.

“நாங்கள் 18 பேரும் இடைத்தேர்தலை சந்திப்போம்!”- தங்கத்தமிழ்செல்வன் பேட்டி.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *