கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?


அன்று கருணாநிதி எம்ஜிஆருக்கு செய்ததை இன்று எடப்பாடி தினகரனுக்கு செய்கிறார்


அடக்கு முறையின் மூலம் ஒருநபரையோ அல்லது ஒரு இயக்கத்தையோ அழித்து விடலாம் என நினைப்போர் தன்னையும் அறியாமல் தன் தோல்வியை நோக்கி பயணம் செய்கிறார் என்பது தான் நிதர்சனம்…!!

ஆம், #மக்கள்திலகம் #MGRன் மக்கள் ஆதரவை பொறுத்து கொள்ள முடியாத கருணாநிதியின் கடந்த கால வரலாற்றை திரும்பி பார்ப்போம்…!!

கருணாநிதி அப்போது முதல்வர்,மக்கள் திலகம் #எம்ஜிஆர் அவர்கள் திரைப்பட நடிகர்,MLA வாகவும் உள்ளார்..!!

ஒரு முறை கருணாநிதியும், எம்ஜிஆர் அவர்களும் ஒன்றாக பொதுகூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது #புரட்சித்தலைவர் பேசியபின் கருணாநிதி பேச எழும்முன்னே கூட்டம் அனைத்தும் கலைந்து போனது..!!

அன்றே கருணாநிதிக்கு எம்ஜிஆர் மீது ஈகோ ஏற்பட்டு எம்ஜிஆரை ஒழிப்பதற்க்கு பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்தார்..!!

அதிலே தனது மகன் முக.முத்துவை எம்ஜிஆருக்கு போட்டியாக திரைப்படத்தில் நடிக்கவைத்தார்..!!

எம்ஜிஆர் படம் ரிலீஸ் ஆகும் சமயம் தனது மகன் படத்தை ரிலீஸ் செய்து எம்ஜிஆருக்கு தியேட்டர் கிடைக்காமல் பார்த்து கொண்டார்..!!

முதல்வர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி எம்ஜிஆரை ஒழிக்க நினைத்தார்.ஒரு கட்டத்தில் எம்ஜிஆரையே திமுகவில் இருந்து நீக்கினார் அதன்பின் தனிஇயக்கம் கண்டார் எம்ஜிஆர்..!!

அந்த இயக்கத்தை அழிக்க அரசு நிர்வாகத்தை, காவல்துறையை பயன்படுத்தினார் கருணாநிதி.அதோடு ரவுடிகள் துணையுடன் எம்ஜிஆரை ஆதரித்தவர்கள் மிரட்டப்பட்டனர்..!!

அப்போது #அதிமுக வளர்ச்சிக்கு எம்ஜிஆர் அவர்களை ஆதரித்த #பூலாவரி_சுகுமாரன்,#வத்தலகுண்டு_ஆறுமுகம், #அண்ணாமலை_பல்கலைகழக_மாணவன்_உதயகுமார் , #சேலம்_கிருஷ்னன் #மதுராந்தகம்_அஹமது_பாஷா போன்ற எம்ஜிஆர் விசுவாசிகள் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள்..!!

இப்படி எம்ஜிஆர் என்ற தனிநபரையும் அவரது கட்சியையும் அழிக்க கருணாநிதி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குமுறை செய்தாலும், பொதுகூட்டத்துக்கு அனுமதி மறுக்கபட்டாலும்..!!

கருணாநிதியால் எம்ஜிஆரை அழிக்கவோ ஒழிக்கவோ முடியவில்லை அதிமுக அசுரவளர்ச்சி அடைந்தது என்பதே உன்மை..!!

அதுபோல #எடப்பாடி_பழனிசாமி முதல்வர் பொறுப்பை #திராவிடத்தலைவர் #TTVதினகரன் அவர்களின் வளர்ச்சியை தடுக்க பயன்படுத்திவருவது நன்றாக தெரிகிறது..!!

#டிடிவியின் பொதுகூட்டத்துக்கு அனுமதி மறுப்பது.கோர்ட்டில் அனுமதி பெற்றால் மேல்முறையிடு செய்து அழைக்கழிப்பது, டிடிவியின் சுவர் விளம்பரத்தை காவல்துறை உதவியுடன் தடுப்பது..!!

களப்பணி செய்வோரை கைது செய்வது போன்ற செயல்கள் மூலம் டிடிவியை அழிக்க ஒழிக்க நினைப்பது முட்டாள் தனமானது..!!

அன்று கருணாநிதி எம்ஜிஆருக்கு செய்து தோல்வியை தழுவினார்..!!

அதேபோல டிடிவியை அழிக்க எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்கிறார்..!!

அழியபோவதும் ஒழியபோவதும் டிடிவி அல்ல #எடுபிடி_பழனிசாமியே..!!

எம்ஜிஆரை எப்படி மக்கள் அரியணையில் அமர்த்தினார்களோ அதேபோல டிடிவியை மக்கள் அரியணையில் அமர்த்தும் காலம் விரைவில் வரும்..!!

அப்போது கருணாநிதி தனது நாவன்மையாலும்,எழுத்தாற்றல் மற்றும் பேச்சுத்திறமையாலும் இவ்வளவு காலம் அரசியலில் தாக்கு பிடித்து கொண்டு இருந்தார்..!!

ஆனால் #மோடி அடிமை #கூவத்தூர்_கோமாளி எடப்பாடிக்கு பேச்சுதிறமை, எழுத்தாற்றல், நாவன்மை, குரல்வளம் இவை எதுவுமேயில்லை..!!

நிர்வாகத் திறமையும் இல்லை, மக்களை கவரும் முகலட்சனமும் இல்லை..!!

ஆக ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆடுவதை நிறுத்துவது நல்லது..!!

இல்லையேல் ஆட்சி கவிழ்ந்து முதல்வர் பதவி பறிபோன பின்பு அரசியல் அநாதை ஆவது உறுதி..!!

மக்கள் மன்றம் டெல்லி சுல்தான் #மோடியின் பேச்சை கேட்டுக்கொண்டு ஆடும் உன்னை ஒருபோதும் மன்னிக்காது…!!
#ImpotentEPS #EpsFails #ResignEPS
நன்றி- Abr Abr

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *