அமைச்சர்கள் பாஜகவுக்கு பயந்து இருக்கிறார்கள் : டிடிவி தினகரன்

ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக டிடிவி தினகரன் வார்டு எண் 38 பகுதிக்கு வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஆர்.கே நகரில் வெற்றி பெறச்செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன். ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. பேருந்து கட்டணத்தை அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம், அரசு அதனை நிறைவேற்ற வேண்டும். அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றம் ஏற்காவிட்டால், பொதுச்செயலாளர் நீதிமன்ற பணிகள், கட்சி பணிகள் குறித்து பார்ப்பார்.. நான் சட்டமன்ற பணிகளை பார்ப்பேன். அதைத்தான் தங்கத்தமிழ் செல்வன், வெற்றிவேல் போன்றோரும் கூறுகிறார்கள். தகுதி நீக்கத்தை எதிர்த்து ஒரு வழக்கு நிழுவையில் உள்ளது. அவர்கள் அதில் வென்றவுடன் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கும் போது அவர்களால் இன்னொரு கட்சிக்கு தாவ முடியாது. இது தான் உண்மை. என்னுடனேயே வெற்றவேல், தங்கத்தமிழ்செல்வன் எல்லோரும் இருக்கிறார்கள். அவர்களே கூட உங்களுக்கு இதைப்பற்றி விளக்கட்டுமே ? இப்போது ஏகப்பட்ட தொலைக்காட்சிகள் உள்ளன. யார் முதல் தொலைக்காட்சி என்று சொல்ல முடியுமா ? அது போல தான் மக்களே அதை முடிவெடுப்பார்கள். மக்கள் எங்களுக்கு கொடுக்கும் ஆதரவுக்கு பாதிப்பு இருக்காது. தேர்தல் முடிவுகள் நிச்சயம் அதை சொல்லும். மார்ச் மாதம் போட்டியிட்டபோது, நிதி இருந்த காரணத்தால் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் வீடு கட்டித்தரப்படும் என்று உறுதி அளித்தோம். அப்போது அமைச்சர்கள் என்னோடு அமைச்சர்கள் ஆட்டோவில் வந்தார். இப்போது பாஜகவுக்கு பயந்து இருக்கிறார்கள்.

நான் சுயேட்சையாக தான் போட்டியிட்டேன். என்னிடம் ஆட்சி, அதிகாரம் இல்லை. ஆனாலும் சரித்திர சாதனையாக என்னை ஆர்.கே நகர் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளார்கள். என் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக தான் வாக்களித்துள்ளார்கள். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும், இரட்டை இலையை மீட்கவும் வாக்களியுங்கள் என்றே கோரினேன். இது இடைக்காலமான தேர்தல் தான் என்றும் அவர்களுக்கு தெரியும். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முந்தைய நாள் வரை வாய்ப்பு தருவதாக கூறி, கடைசியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க இருந்தேன். அனுமதி அளிக்கவில்லை. ஒரு மாதம், இரண்டு மாதம் காத்திருப்பேன். கேட்காவிட்டால் ஆட்சி போகும். இது தொடர்பாக மக்களை அழைத்துக்கொண்டும் நான் போராட்டம் நடத்துவேன்” என்று தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*