தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தினகனின் ஆளுமை அம்மாவின் தொடர்ச்சி

By Admin - January 27th, 2018

Tags : Aiadmk, Jayalalitha, TTV Dhinakaran, Category : News,


நாங்கள் அம்மாவின் வழியில் கட்சியை நடத்துகிறோம் . தினகரனின் அரசியல் அம்மாவின் அரசியலை போல இல்லை என்கிறார்கள் அடிமை தரப்பு

திண்டுக்கல் இடைத்தேர்தல் சென்னையில் நடந்திருந்தால் அ தி மு க வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே . கல்யாண சுந்தரம் போன்ற தலைவர்கள் . ராஜாஜி , ஈ வி கெ சம்பத் ஏன் கண்ணதாசனும் கூட வாத்தியாருக்கு பலம் சேர்ந்தனர் . அவர்கள் அறிவுரை அவருக்கு திராவிட முன்னேற்றக்கழகம் என்கிற பலம் பொருந்திய இயக்கத்தை எதிர்கொள்ள உறுதுணையாக இருந்தது . சித்தாந்த ரீதியில் மிக ஆழமான கருத்துக்களை கொண்ட தி மு க வை அன்றைய தினம் எதிர்கொள்வதற்கு இந்தத்தலைமைகளின் அறிவுரைகளும் ஆதரவும் பலமே .

அது போன்ற பெரிய ஆளுமைகளின் பலம் இல்லாத நிலையில் மூப்பனார் / வாழப்பாடி போன்றவர்களின் ஆதரவு அரைமனதுடன் இருந்த நிலையில் அம்மா என்கிற ஆளுமை தன்னை நிலைநாட்டிக்கொண்டதை வாத்தியார் செய்துருக்க முடியுமா என்றால் , அது சந்தேகமே . இரட்டை இலைக்கு ஆதரவளிக்காதீர்கள் என்று வாத்தியார் ஒரு தேர்தலின் பொழுது பிரச்சாரம் செய்தும் இரட்டை இலை வெற்றிபெற்ற வரலாறும் உண்டு . ஆனால் அம்மா சந்தித்த தேர்தல் பின்னணடைவுகளை போல வாத்தியார் சந்திக்கவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை .

வாத்தியார் / இந்திரா காந்தி , வாத்தியார் / மொரார்ஜி தேசாய் , வாத்தியார் /சரண் சிங் , வாத்தியார் / ராஜிவ் காந்தி என்று மத்திய மாநில உறவுகளின் அரசியலையும் … அம்மா / நரசிம்ம ராவ் , அம்மா / வாஜ்பாய் , அம்மா / மன்மோகன் சிங் , அம்மா / நரேந்திர மோடி மத்திய மாநில உறவுகளின் அரசியலையும் பார்த்தல் , வாத்தியாரை காட்டிலும் அம்மாவின் ஆளுமை ராஜதந்திரம் என்றில்லாமல் தனது ஆளுமையை தனிப்பட்ட இமேஜின் வெளிப்பாடாக எடுத்துச் சென்றதை கவனிக்க முடியும் .

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் , தற்பொழுது மூன்றாவது அத்தியாயமாக வந்திருக்கும் தினகரனின் ஆளுமையும் வேறு ஒரு டிராக்கில் பயணிக்கத்துவங்கியுள்ளது என்பதை கவனிப்பதால் தான் . தினகரன் அம்மாவின் வாரிசு கிடையாது , தினகரன் ஆளுமையின் தொடர்ச்சி . வாத்தியாரின் வாரிசு அம்மா கிடையாது . ஆளுமையின் தொடர்ச்சி தான் அம்மா . ஒரு தலைமையின் சிறப்பு பிந்தைய தலைமையின் தொடர்ச்சியாக தன்னைக்காட்டிக்கொள்ளும் அதே சமயத்தில் அந்தத்தலைமையிலிருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொள்வதில் தான் உள்ளது . வாத்தியார் நாமம் வாழ்க என்று அம்மா சொன்னாலும் , ஜெ ஜெயலலிதா என்னும் நான் என்று தன்னை நிலைநாட்டிக்கொள்ளத்தான் செய்வார் , அதுவே இயற்கையின் நியதி .

அது வாத்தியாரை மழுங்கடிக்கச் செய்வதாக பொருள் படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை . ஆளுமை தன்னை நிலைநாட்டிக்கொள்ள தன்னை பிந்தைய தலைமையிலிருந்து பிரித்து காண்பிக்கவேண்டிய அவசியத்தின் வெளிப்பாடு . வெற்றி என்பது தான் பிந்தைய தலைமைக்கு தற்பொழுதைய தலைமை கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு . கழகத்தை அடமானம் வைக்காததை விட பெரிய சேவையை வாத்தியாருக்கு , அம்மாவுக்கும் செய்து விட முடியுமா ?

ஆர் கெ நகரில் அம்மாவால் கூட தி மு க வின் டெப்பாசிட்டை காலி செய்ய முடியவில்லை ஆனால் தினகரன் செய்தார் என்பதில் அம்மாவுக்குத்தான் பெருமை . வாத்தியாரை விட அதிக ஆண்டுகள் அம்மா ஆட்சி புரிந்தார் என்பதில் வாத்தியாருக்த் தான் பெருமை . இந்த பின்னணியில் தான் தினகரனின் அப்ரோச் பார்க்கப்படவேண்டும் . கனிமொழி வழக்கிலிருந்து விடுதலையானதற்கு வாழ்த்து தெரிவித்ததாக இருக்கட்டும் . பத்திரிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வதாக இருக்கட்டும் , சட்டப்பேரவையில் தி மு க எம் எல் எங்களுக்கு மரியாதை கொடுப்பதாக இருக்கட்டும் . தினகரன் தன்னை அம்மாவிடமிருந்து வேறுபடுத்திக்காண்பிக்க நகர்த்தும் காய்களே . அது முற்றிலும் சரியே . நமக்குத்தேவை வாத்தியார் அம்மா வுக்கு அடுத்த இன்னொரு ஆளுமை … தனித்துவம் கொண்டிருந்தால் தான் அது சாத்தியம் . அம்மாவின் ஆசிபடி என்று சொல்லிக்கொண்டிருப்பது பெரிய விஷயமல்ல . அம்மாவுக்கு பின்னர் இயக்கத்தை வழிநடத்துவது தான் ஆளுமை . ஆட்சி அதிகாரம் நிரந்தரமல்ல , ஆளுமை தான் நிரந்தரம் .

By
Kishore K Swamy

Related Posts

ஆளுங்கட்சியினர் வீட்டில் சோதனை நடத்துவதில்லை – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

பணத்தை அள்ளிக்கொண்டு செல்லும் ஆளும் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறினார். அம்மா மக்கள்…

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்

‘வாரிசு அரசியல் குறித்து அடுத்தவர்களுக்குத்தான் அட்வைஸ், தனக்கு அது பொருந்தாது என ஓ.பி.எஸ் தன் மகனுக்கு சீட் கொடுத்துள்ளார்’ என…

பாராளுமன்றத்தை முடக்க அதிமுகவை பாஜக பயன்படுத்திக் கொண்டது – ஜெய்ராம் ரமேஷ்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எதிர் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தது.  அதிமுக…

சசிகலாவிற்கு பரோல்! தினகரனின் பயணத்திட்டங்கள் ரத்து!

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவரும், ஆர்கே நகர் MLA தினகரனின் சித்தப்பாவுமான ம. நடராஜன் உடல்நலக்குறைவால்…

இன்று தீர்ப்பு வெளியாகிறது.. அடுத்த வாரத்தில் ஆட்சி கவிழ்கிறது – ஜோதிடர்

அ.தி.மு.க.வில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன.ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி. தினகரன்…
அண்மை செய்திகள்

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!


ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

அவரின் வரவுக்காக தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம் !

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share