கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - அது என்ன?


கணவனின் கொலைக்கு காரணமானவர்களை அடுத்தடுத்து கொலை செய்த மனைவி!

தனது கணவரின் கொலைக்குக் காரணமான அனைவரையும் கொலை செய்யப் போவதாகக் கூறியுள்ள பெண் ஒருவர், 3 பேரை கொலை செய்து, நான்காவது நபரை கொலை செய்ய திட்டமிட்டபோது கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர் ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி. ராமுவுக்கும், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவகுமாருக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்த நிலையில், பின்னர் அது பகையாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராமு தனது 2 வது மனைவி எழிலரசியுடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சிவக்குமார்தான் ஆட்களை ஏவி ராமுவை கொலை செய்ததாக எழிலரசிக்கு தெரிய வந்ததையடுத்து தனது கணவரை கொலை செய்தவர்கள் அனைவரையும் பழிவாங்கியே தீருவேன் என அவர் சபதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி ஐயப்பன், ராமுவின் முதல் மனைவி வினோதா, சிவகுமார் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட எழிலரசி, ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், காரைக்காலை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தனை கொலை செய்ய திட்டமிட்ட எழிலரசி, அது தொடர்பாக தனது கூட்டாளிகளுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது குறித்த ரகசிய தகவல் போலீசாருக்குக் கிடைத்ததை அடுத்து, அதிரடிப்படை மற்றும் கோரிமேடு போலீசார் ஓட்டலை சுற்றி வளைத்து எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் 13 பேரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி ராஜிவ் ரஞ்சன், குண்டர் சட்டத்தில் இருந்து வெளிவந்த எழிலரசி மற்றும் அவரது கூட்டாளி விக்ரமனை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *