தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்றிருந்தால் யார் தடுத்திருக்க முடியும்? : டிடிவி தினகரன்

By Admin - February 20th, 2018

Tags : Sasikala, TTV Dhinakaran, Category : Tamil News,

ஜெயலலிதா இறந்த அன்று சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்றிருந்தால் யார் தடுத்திருக்க முடியும்? என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஜெயலலிதா மீதான கோபம்
மத்திய பா.ஜ.க. தலைமை, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் எப்படியாவது அ.தி.மு.க.வை அழித்துவிட நினைக்கின்றனர். காரணம் என்னவென்றால் 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை. தேர்தலில் தனியாகவே களம் இறங்கினார். ‘மோடியா, இந்த லேடியா’, என்று கூறி, தனியாக தேர்தல் அறிக்கை கொடுத்து தமிழகத்தில் 37 பாராளுமன்ற தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

இதனால் ஜெயலலிதாவின் மீது பா.ஜ.க. கடும் கோபம் அடைந்தது. அந்த கோபத்தை அவர் மீது காட்டமுடியவில்லை. ஜெயலலிதாவுடன் எங்கள் குடும்பம் (சசிகலா) 30 வருடங்கள் ஆதரவாக இருந்து வந்திருக்கின்றனர் என்பதால் தான் எங்களிடம் கோபத்தை காட்டுகின்றனர். கட்சியை அழிக்க நினைக்கிறார்கள். தமிழக மக்களுக்கு எல்லாமே தெரியும்.

யாரால் தடுத்திருக்க முடியும்?
நான் கேட்கிறேன், ஜெயலலிதா இறந்த அன்றைய தினமான டிசம்பர் 5–ந்தேதி இரவே சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்றிருந்தால் யார் தடுத்திருக்க முடியும்? அல்லது என்னை முதல்–அமைச்சராக ஆக்கியிருந்தால் யார் தடுத்திருக்க முடியும்?

சசிகலா மனது வைத்ததால் தான் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் ஆதரித்ததின்பேரில் முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்க முடிந்தது. இது ஊர் அறிந்த வி‌ஷயம். இதை மறுக்க முடியுமா? இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுக்கு ஏஜெண்டுகளாக (முகவர்களாக) செயல்படுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் ஏஜெண்டாகிவிட்டார்.

நல்ல பாடம் கிடைக்கும்
தற்போது முதல்–அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், துணை சபாநாயகர் தம்பிதுரை இவர்கள் அனைவரும் தினமும் வந்து ‘சசிகலா தான் முதல்–அமைச்சராக வேண்டும்’, என அவரிடத்தில் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக தம்பிதுரை டிசம்பர் 5–ந்தேதிக்கு பிறகு தினமும் போயஸ் கார்டனிலேயே இருப்பார். டெல்லிக்கெல்லாம் செல்லவே மாட்டார். இங்கேயே இருந்து தினமும் சசிகலாவை சந்தித்து ‘நீங்கள் தான் கட்சி பொதுச்செயலாளராக வேண்டும், நீங்கள் தான் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தபடியே இருப்பார். இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டனர். எல்லாமே மக்களுக்கு தெரியும். நல்ல பாடம் அவர்களுக்கு விரைவிலேயே கிடைக்கும்.

Related Posts

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எதிரொலி.. ஆதரவாளர்களுடன் தினகரன் அவசர ஆலோசனை

தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் தினகரன்…

குக்கர் சின்னம்: தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

குக்கர் சின்னத்தை தமது அணி பயன்படுத்த அனுமதிக்க கோரி, டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க…

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு!

ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அம்மா…

எம்ஜிஆா் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயா்!

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி அழைப்பிதழில் ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் பெயா் இடம் பெற்றுள்ள நிலையில்…

எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர் – டிடிவி தினகரன்

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது….
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share