கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?


நாச்சியாரைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் அடுத்த படம்!

36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்பில் எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை ஜோதிகா, மகளிர் மட்டும், நாச்சியார் என தன் நடிப்புக்கு தீனிபோடும் வகையில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இயக்குனர் மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் நடிகை ஜோதிகா, வித்யா பாலன் நடிப்பில் வெளியான ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

36வயதினிலே, நாச்சியார் என சட்டென திரும்பி பார்க்க வைக்கும் டைட்டில்களாக நடிகை ஜோதிகாவிற்கு அமைந்து வர, தற்போது இந்த ரீமேக் படத்திற்கு “உங்கள் ஜோ” என பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இந்த டைட்டில் கண்டிப்பாக ரசிகர்களை கவரக்கூடியதாக உள்ளது. மேலும் ஜோதிகாவின் மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் இந்த படத்தையும் இயக்க விரைவில் இப்படத்தின் அடுத்த கட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *