ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரஜினி இன்று இரவு மும்பை பயணம்?

ஸ்ரீதேவி கேமரா முன்னால் நெருப்பு – ரஜினி

சென்னை: ஸ்ரீதேவியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த இன்று இரவு அவருடைய நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த் மும்பை செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அங்கு அவரது உயிர் பிரிந்தது.ஆரம்ப காலத்தில் ரஜினி, கமல் ஆகியோருடன் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் இறப்பு ஈடு செய்ய முடியாதது என்று ரஜினியும், கமலும் தனித்தனியே இரங்கல் செய்தி வெளியிட்டும், பேட்டியையும் கொடுத்தனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக மும்பைக்கு இன்று இரவு விமானம் மூலம் துபாயிலிருந்து அழைத்து கொண்டு வரப்படுகிறது. அவரது உடல் கெட்டு விடாமல் இருப்பதற்காக எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ரஜினிகாந்த் இன்றிரவு மும்பை செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *