கருத்துகணிப்பு : ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் யார் ?


விடுகதை : இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - அது என்ன?


ஸ்ரீதேவி உறவினர்கள் அளிக்கும் அதிர்ச்சி தகவல்கள்!

திருமணத்திற்கு பின் மகள்களை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்த நடிகை ஸ்ரீதேவி, கணவர் போனி கபூருக்கு ஏற்பட்ட கடன் பிரச்னையை தீர்க்கவே மீண்டும் நடிக்க வந்ததாக, ஆந்திராவில் இருக்கும் ஸ்ரீதேவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவியில் தாய் ராஜேஸ்வரியின் சித்தி மகனும், ஸ்ரீதேவியின் சித்தப்பாவுமான வேணுகோபால் ரெட்டி திருப்பதியில் வசித்து வருகிறார். ஸ்ரீதேவியின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீதேவி சிறுவயது முதல் தங்களது வீட்டில் வளர்ந்ததாக கூறியுள்ளார்.

பெரிய நடிகையான பிறகு பாதுகாப்பு காரணங்களால் தங்களது வீட்டிற்கு வர மாட்டார் என்றும், திருப்பதியில் அவர் தங்கியிருக்கும் அறைக்கு சென்று பேசி விட்டு வருவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதேவியின் கணவருக்கு திரைத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்யவே, இங்கிலிஷ் விங்லிஷ், மாம் ஆகிய படங்களில் ஸ்ரீதேவி நடித்ததாகவும் வேணுகோபால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி மரணத்தில் துபாய் அரசு என்ன கூறுகிறதோ அதை ஏற்கும் நிலையில் தாங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags:

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *