போருன்னு சொல்லிட்டு படம் நடிக்கப் போகலாமா?- ரஜினியை கலாய்த்த கஸ்தூரி

ஆண்டவரே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், அதென்ன மய்யம் எனக் கேட்டு கமலையும், போருன்னு சொல்லிட்டு இப்படி பொசுக்குன்னு சினிமா நடிக்க ஒப்பந்தம் செய்கிறீர்களே என ரஜினியையும் நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்தது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. தென் மாவட்டத்து பக்கம் மய்யம் என்றால் பிணம் என்று சொல்வார்கள் என சிலர் முகநூலில் விமர்சித்து வருகிறார்கள். கட்சி பேரை மக்கள் நீதி மய்ய கட்சின்னு சொல்லணுமா? மக்கள் நீதி மய்யம்னு சொல்லணுமா? என்றெல்லாம் கேள்விகள் வைக்கப்படுகிறது.

மய்யமா, மையமா என்றும் சிலர் கேட்கிறார்கள். இது குறித்து கமல் தரப்பில் பதில் எதுவும் இல்லாத நிலையில் நடிகை கஸ்தூரி மீண்டும் கமலை கிண்டல் அடித்துள்ளார்.  ஏற்கெனவே பிக்பாஸ் டீம் களம் இறங்கியதாக கமல் கட்சியை விமர்சித்த கஸ்தூரி தற்போது அவரது மய்யம் என்ற பேரை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

“எனக்கு ஒரு அய்யம், அது என்ன மய்யம்? மையம் வேற மய்யம் நா வேறா போலிருக்கு. சரி அத்த வுடு ம-ய்-ய-ம் இங்கிலீஷ்ல ma-y-ya-m தானே? 2maiAm 2மைஅம் னு வருது…

தூக்கம் போச்சு, அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் இப்பவே தெரிஞ்சாகணும்.” என்று கேட்டுள்ளார்.

இதற்கு அவருக்கு பலரும் பதில் சொல்லியுள்ளனர். பலரும் கிணடலடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தையும் தனது ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

ரஜினி தனது அடுத்த பட அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனது அரசியல் பிரவேசத்தை போர் என அறிவித்தது விமர்சனத்துக்குள்ளானது.

அதை சுட்டிக்காட்டி, ”அட என்னப்பா போருக்கு படைகளை தயார்படுத்துவார்னு பார்த்தா, படம் தயார் பண்ண போறாராமே? அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். மறுபடி முதல்லயிருந்தா, ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு, கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள்” என்று ட்விட் செய்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *