எடப்படிக்கு சவால் விட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து பதவியை ராஜினாமா செய்ய தயாரா என்று தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சற்று ஆக்ரோசத்துடன் தான் காணப்படுகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர், நான் அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்.

நீங்கள் உங்கள் தொகுதிகளில், உங்கள் பதவிகளை ராஜினாமா பண்ணுங்கள். தேர்தல் வரட்டும். மூன்று தொகுதிகளிலும் ஜெயிப்பது, நீங்கள் நிறுத்தும் வேட்பாளரா, இல்லை டி.டி.வி.தினகரன் அண்ணன் நிறுத்தும் வேட்பாளரான்னு பார்ப்போம்’ என்று தெரிவித்து உள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர்,

ஒன்றரைக் கோடி அ.தி.மு.க உறுப்பினர்களில் 90 சதவிகித உறுப்பினர்கள் விரும்புகிற தலைவராக அண்ணன் டி.டி.வி.தினகரன் மட்டுமே இருக்கிறார்.

ஆனால், எடப்பாடியார், தினகரன் பெற்ற வெற்றி ஆர்.கே.நகரோடு முடிந்தது என்று வாய்கூசாம சொல்றார்.

துரோகிகள் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் சவால் விடுறேன். அரவக்குறிச்சி தொகுதியில் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா பண்ணிடுறேன்.

நீங்களும் உங்கள் தொகுதிகளில் உங்க சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா பண்ணிடுங்க. அந்த மூன்று தொகுதிகளில் நீங்களும் வேட்பாளர்களை நிறுத்துங்க, அண்ணன் டி.டி.வி.தினகரனும் வேட்பாளர்களை நிறுத்தட்டும். யார் வெற்றிபெறுகிறார்கள் என்பது அப்போது தெரியும். என்ன, சவாலுக்குத் தயாரா? என்று காட்டமாக பேசி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *