எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர் – டிடிவி தினகரன்

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழ்க்கப்படும் என தினகரன் தெரிவித்துவருகிறார். ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தினகரனுக்கு உள்ளது. இதற்கிடையே தினகரனும் ஆர்.கே.நகரில் அபார வெற்றி பெற்று ஆட்சியாளர்களை மிரட்டி வருகிறார் இந்நிலையில், பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தற்போது தினகரனை சந்தித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

எம்எல்ஏவின் பணிகளை செய்வதற்கு மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டை போடப்படுகிறது . அதிமுகவில் இருந்து மக்கள் சேவையை சரிவர செய்ய முடியவில்லை . விழுப்புரம் மாவட்டத்தில் என்ன பிரச்சினை என்பது முதல்வருக்கே தெரியும். கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. மக்கள் ஆதரவு டிடிவிக்கு உள்ளது என்பது ஆர்.கே.நகர் தேர்தலிலேயே தெரிகிறது. அதிமுகவை வழிநடத்தவும், தலைமை தாங்கவும் சசிகலா மற்றும் தினகரனுக்கே திறமை உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:-

முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்து விடுவார்கள். எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். என்னை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ சிலீப்பர் செல் அல்ல. ஈபிஎஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆவதால் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவி கேட்கிறார். முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை என பன்னீர்செல்வம் விரக்தியில் பேசுகிறார்.

நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது மட்டுமே சிலீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள். அனைத்துக்கட்சி கூட்டம் வரவேற்கத்தக்கது; சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் வலிமையானதாக இருந்திருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*