கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?


5 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி !


ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் அல்வார் நாடாளுமன்ற தொகுதிகள், மண்டல்கர் சட்டமன்ற தொகுதி, மேற்கு வங்காளத்தில் உள்ள உலுபெரியா நாடாளுமன்ற தொகுதி, நவுபாரா சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 29-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. 5 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

அல்வார் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கரன் சிங், பாஜக வேட்பாளர் ஜஷ்வந்த் யாதவை 1,56,319 வாக்குக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், உலுபெரியா மக்களவை தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சஜ்தா அகமது, பாஜக வேட்பாளர் அனுபம் மாலிக்கை 4,74,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அஜ்மீர் மக்களவை தொகுதியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 66 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. அதனால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது.

நவுபாரா சட்டப்பேரவை தொகுதியில் திரிணாமூல் கட்சி 66, 232 வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரி வேட்பாளரை தோற்கடித்தது. திரிணாமூல் வேட்பாளர் 1,01,729 வாக்குகள் பெற்றார். இடதுசாரி வேட்பாளர் 35,497 மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் 10, 527 வாக்குகள் பெற்றனர். பாஜக வேட்பாளர் 38, 711 வாக்குகள் மட்டுமே பெற்றார். மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

ராஜஸ்தானில், அஜ்மீர் தொகுதி எம்.பி.யாக இருந்த சன்வர்லால் ஜேட்(பாஜக), அல்வர் தொகுதி எம்.பி.யாக மஹந்த் சந்த் நாத் யோஜி(பாஜக), மண்டல்கர் தொகுதி எம்.எல்.ஏவான கீர்த்தி குமாரி(பாஜக) ஆகியோர் கடந்த ஆண்டு மரணம் அடைந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆளும் கட்சியான பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *