கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : காட்டில் இருப்பான்; வீட்டிலும் மணப்பான், அவன் யார்?


விரைவில் ஓ.பி.எஸ் பழைய தொழிலுக்கே செல்ல ஏற்பாடு ரெடி…..தெறிக்க விட்ட தினகரன்!


ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததற்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தான் காரணம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவு எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விடும் என்று டி.டி.வி.தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் அணியின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டமானது நேற்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டி.டி.வி.தினகரன் கூறுகையில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றவுடனே நாங்கள் புதிய கட்சியை தொடங்கியிருக்க முடியும். ஆனால், எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி விதிகளின் படி, ஒருவர் புதிய கட்சியை தொடங்கினால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதி இழக்கிறார்.

இதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இது பெரும் சிக்கலை உருவாக்கும் என்று கூறினார்.

அதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னம் தோல்வி அடைந்ததற்கு ஓபிஎஸ் தான் காரணம். அவருடைய சுயநலத்தால்தான் அ.தி.மு.க தோல்வி அடைந்தது.

எந்த டி.டி.வி.தினகரனால் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டு முதலமைச்சராக ஆக்கப்பட்டாரோ அதே டி.டி.வி.தினகரனால் அவர் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்.

மீண்டும் அவர் தனது பழைய தொழிலுக்கு செல்வதற்கு விரைவில் ஏற்பாடு செய்வேன் என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் டீக்கடை வைத்துதான் ஓபிஎஸ் தனது தொழிலை துவங்கினார். எனவே, டி.டி.வி.தினகரன் அதைத்தான் குறிப்பிடுகிறார் எனத் தெரிகிறது

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *