கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : காட்டில் இருப்பான்; வீட்டிலும் மணப்பான், அவன் யார்?


இளைய சமுதாயத்தின் கனவை நாசமாக்கும் தமிழக அரசு : எடப்பாடியை வெளுத்து வாங்கிய தினகரன்!

2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் 94 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்போது, தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை வைக்கப்பட்டது.

நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த 29-ந் தேதி இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை என்பது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டு இருக்கிறது.

 

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில், தற்போது 5 ஆண்டுகள் நிறைவுப் பெற்றுவிட்ட நிலையில் அரசு எந்த முடிவையும் அறிவிக்காதபோது, 94 ஆயிரம் பேருக்கும் இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அரசோ மிகுந்த அலட்சியத்தோடு இவர்களை கையாளுகிறது. தேர்ச்சி பெற்ற இத்தனை ஆயிரம் பேருக்கும் உரிய பணி கிடைக்காவிட்டால் ஆசிரியர் தகுதி தேர்வின் நோக்கத்தையே நிர்மூலமாக்குவதாகும். எனவே காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு, அவர்களின் நீண்டகால போராட்டத்துக்கு நல்ல முடிவை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் 1058 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 1.22 லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதிய தேர்வில் 200-க்கும் அதிகமானோர் முறைகேட்டில் ஈடுபட்டதால், தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு, விரிவுரையாளர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. முறைகேடு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு பெரும் துன்பத்தை அளித்துள்ளது. இது, இந்த அரசின் கையாலாகாத தனத்தைத்தான் காட்டுகிறது.

தமிழகத்தின் எதிர்காலத்தையும், இளைய சமுதாயத்தின் கனவையும் நாசமாக்கிவிடும் இந்த அரசு நிச்சயம் வீழ்த்தப்பட வேண்டும். அலட்சிய மனப்பான்மையும், ஊழல் முறைகேடும் கொண்ட இந்த அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *