ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் போலீஸார் விசாரணை!

திருமண நிகழ்ச்சிக்காக துபாய் வந்துவிட்டு மும்பைக்கும் அங்கிருந்து மீண்டும் துபாய்க்கும் வந்தது ஏன் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக துபாய்க்கு தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் போனி கபூர் மட்டும் மும்பை சென்றுவிட்டு உடனடியாக மீண்டும் துபாய் வந்து ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இருவரும் இரவு விருந்துக்கு செல்வதற்காக தயாராகியிருந்தபோது அவர்கள் தங்கியிரு்நத நட்சத்திர ஹோட்டல் பாத்ரூமில் மயங்கி இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக முதலில் கூறப்பட்டது.மதுபானம்இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு உடற்கூறாய்வு சோதனை நடத்தி முடிக்கப்பட்டன.

அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் அவரது ரத்தத்தில் மதுபானம் கலந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.போனி கபூரிடம் விசாரணைஇந்த அறிக்கையில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதால் அவரது உடல் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை புர் துபாய் காவல் நிலைய போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர்.வாக்குமூலம்அப்போது அவரிடம் துபாயிலிருந்து மும்பைக்கும் அங்கிருந்து பின்னர் துபாய்க்கும் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டது ஏன் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.

ஆவணங்கள் வழக்கறிஞரிடம் ஒப்படைப்புமேலும் துபாய் போலீஸிடம் இருந்து ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வு முடிவுகள், போனி கபூரின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆவணங்கள் அரசு வழக்கறிஞரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் அவற்றை ஆய்வு செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்வார்.உடலை கொண்டு வருவதில் சிக்கல்ஆனால் இந்த விவகாரத்தில் உடற்கூறாய்வு அறிக்கையிலும், போனி கபூரின் வாக்குமூலத்திலும் துபாய் அரசு வழக்கறிஞருக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *