தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சிலையின் முகத்தில் ஜெயலலிதாவின் சாயல் சிறிதும் இல்லை : டிடிவி தினகரன்

By Admin - February 28th, 2018

Tags : Jayalalitha, TTV Dhinakaran, Category : Tamil News,

கடந்த 24-ஆம் தேதி, மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, அதிமுக கட்சி அலுவலகத்தில், உள்ள எம்.ஜி.ஆரின் சிலையின் அருகே, ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அதனை ஓபிஎஸ்-ம், இபிஎஸ்-ம் தான் திறந்து வைத்தனர்.

ஆனால், அந்த சிலையைப் பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். ஏனென்றால், அந்த சிலையின் முகத்தில், ஜெயலலிதாவின் சாயல் சிறிதும் இல்லை. இதைத் தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த மக்களே, இதைப் பார்த்து நொந்து போய் விட்டார்கள்.

இது யாருடைய சிலை என்று, ஒரு பட்டி மன்றமே வைக்கும் அளவிற்கு, ஏகப்பட்ட குழப்பங்களுடன், அவசரகதியில் உருவாக்கப் பட்ட இந்தச் சிலையின் அகலமும் அதிகமாக இருக்கிறது, என்ற குற்றச்சாட்டும் மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

இந்த சிலையின் முகத்தை ஒரு பக்கம் பார்த்தால், நடிகை காந்திமதி போலவும், இன்னொரு பக்கம் பார்த்தால் கே.பி.சுந்தராம்பாள் போலவும், மற்றொரு புறம் வளர்மதி போலவும் இருக்கிறதென்று, கடந்த இரண்டு நாட்களாக, வாட்ஸ் அப்பிலும், நெட்டிலும் மக்கள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதை விடக் கொடுமையானது என்னவென்றால், இந்த சிலையின் முகத்தையும், முதல்வர் எடப்பரடி பழனிச்சாமி மனைவியின் புகைப்படத்தையும், சேர்த்துப் போட்டு, அம்மாவிற்கு சிலை வைக்கச் சொன்னால், மனைவிக்கு சிலை வைத்திருக்கிறாரே என்று கிண்டல் அடிக்காத மக்களே இல்லை.

இந்த செய்தி தான் இப்போது மக்களிடையே வைரலாகப் பரவி வருகிறது. இதைப் பற்றியான கமெண்ட்ஸ் தான், இப்போதைய தமிழகத்தின் காமெடி ஹை லைட்டான விஷயமாக இருக்கிறது.

எரியும் தீயில், எண்ணெய் ஊற்றுவது போல, “ஏய்யா. புரட்சித் தலைவி அம்மாவிற்கு சிலை வைக்கனும்னு நெனச்சுக்கிட்டு, யாருடைய அம்மாவிற்கோ சிலை வச்சிருக்கீங்களே” ஒரு சிலையைக் கூட உருப்படியாச் செய்ய முடியாத நீங்க, என்னத்த ஆட்சி பண்ணிக் கிழிக்கப் போறீங்க… என்று டிடிவி தினகரன், சகட்டு மேனிக்குப் பேசினாராம்

Related Posts

ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ்

செனனை அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதவது:- ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது…

விளம்பி ஆண்டு பிறந்தது தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

சென்னை, தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து விளம்பி ஆண்டு இன்று (சனிக் கிழமை) பிறந்தது.இதையொட்டி, புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு அரசியல்…

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் மக்கள் செல்வர் திரு.TTV தினகரன் அவர்கள் !! #TTVDhinakaran | #AMMK…

கொங்கு மண்டலத்திலும் கொடியை நாட்டிய டிடிவி தினகரன்

ஆங்கில பத்திரிக்கை​…. ​டெக்கான்-க்ரானிக்கள்… (DeccanChronicle) பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தி…. “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை” ஆரம்பித்தபிறகு…. மேற்கு மண்டலத்தில் முதல்…

இரட்டை இலையை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி. குற்றச்சாட்டு

இரட்டை இலையை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி. குற்றச்சாட்டு மறைந்த முதலமைச்சர் இதயதெய்வம் அம்மாவின் 70-ம் ஆண்டு பிறந்தநாள் விழா…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share