Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

சசிகலா தலைமை ஏற்றால் மட்டுமே அஇஅதிமுக கட்சி உடையாமல் இருக்கும் -அனிதா குப்புசாமி


அதிமுக தலைமை கழகத்தின் பேச்சாளராக இருந்த அனிதா குப்புசாமி அரசியலில் இருந்தே சில காலம் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை பெசண்ட் நகரில் உள்ள இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் நடவடிக்கை சரியில்லை. ஜெயலலிதா வழிகாட்டுதலுக்கு எதிராக சில செயல்கள் நடக்கிறது. அவர்கள் வழியில் இவர்கள் நடக்கவில்லை. அதனால் அதிமுகவில் இருந்து விலகுகிறேன். வேறு எந்த அணியிலும் இணையப்போவதில்லை.

பொதுவாழ்க்கையை குறித்து யார் தான் சிந்திக்கிறார்கள்? டூவிலர் கூட வாங்க முடியாத சாதாரண மக்கள் தான் பேருந்தை உபயோகப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் கலைஞராக இருந்தாலும், ஜெயலலிதாவக இருந்தாலும் இதை செய்வார்களா? அனுபவப்பட்ட தலைவர்கள் அவர்கள். இப்படி பேருந்து கட்டணத்தை விலை ஏற்றுவார்களா? என்றுக்கூறி பேட்டியை முடித்தார்.

அதன் பின் குறிப்பிட்ட சில நிருபர்களிடம் பேசிய அவர்,

என் கணவர் குப்புசாமிக்கு கட்சியில் சேரும் போதே இசைக்கல்லூரி துணைமுதல்வராக பதவி தருவதாக ஜெயலலிதா என்னிடம் கூறியிருந்தார். ஆனால், அதன் பின் அவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து, உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டு ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையில் அணி பிரிந்தது. அதன் பின்னும் கட்சியில் தொடர்ந்து இருந்தேன். ஆனால் ஜெயலலிதா சொன்னப்படி, தற்போது உள்ளவர்கள் இசைக் கல்லூரியில் என் கணவருக்கு பதவி வழங்கவில்லை. அதனால் தான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

விரைவில் ஓ.பி.எஸ் பழைய தொழிலுக்கே செல்ல ஏற்பாடு ரெடி…..தெறிக்க விட்ட தினகரன்!

புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் – டி.டி.வி தினகரன்

Related Posts

நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாத அதிமுக, அரசியல் நாகரிகம் தெரியா துரோகிகள்: திவாகரன்

தஞ்சை: அதிமுக குறித்து திவாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்….


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை…!

பெரும்பணக்காரர்கள் வெளிநாட்டு ஆடம்பரக் கார்களை வைத்திருப்பதை பெருமையாக நினைப்பதைப்போலவே, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதை கெளரவமாக கருத்துகிறார்கள் பல விஐபிகள்….


ஜெயலிலதா வீடியோ வெளியிடுவதற்கான காரணம் இதுதான்

ஓராண்டுக்கு முன்னரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும் இதே சர்ச்சை தான் எழுந்திருக்கும். சசிகலா பற்றி பலரும் அவதூறாக பேசிய போதே…


தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்- தினகரன் பேச்சு

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயண நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசி வருகிறார். 3-வது நாளாக நேற்று செஞ்சி…


ஜெயலலிதா மரணத்துக்கு பா.ஜ.க வே காரணம்! சசிகலா

ஜெயலலிதா மரணத்துக்கு பா.ஜ.க.வும் காரணம்: சிறையில் சசிகலா பற்ற வைத்த புது நெருப்பு அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. விரைவில் இணைய இருக்கிறது!…




அண்மை செய்திகள்