கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அடி மலர்ந்து நுனி மலராத பூ? அது என்ன?


பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியது சசிகலாதான்: தினகரன்

பெங்களூரில் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பன்னீர்செல்வம் சொல்வதை எல்லாம் எடுத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சியில் இருக்கிறார். இவர் கட்சியை விட்டு ஒதுங்கிப் போனதற்கு பா.ஜ.க. தான் காரணம் என்பது தெரிகிறது.

தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். எனவே பன்னீர்செல்வத்தை பெரிதாக எடுத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். பிரிந்ததற்கு காரணம் என்ன? முதல்வர் பதவி இல்லாததால் தியானம் இருந்தேன் என்று பன்னீர்செல்வம் சொன்னால் சரி.

கட்சியை உடைக்க நினைத்தேன். பா.ஜ.க. ஆதரவு இருந்ததால் ஒரு 10, 11 எம்.எல்.ஏ.க்கள் ஏமாந்து வந்தார்கள். இன்னும் 10 எம்.எல்.ஏ.க்கள் போக இருந்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்டார்கள். எதிர்த்து வாக்களித்தோம் என்பதை எல்லாம் பன்னீர் செல்வம் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

தர்ம யுத்தம் நடத்தினார். இந்த அரசு ஊழல் அரசு என்றெல்லாம் சொல்லி விட்டு, திடீரென்று பிரதமர் சொன்னார் இணைந்தேன் என்று சொல்கிறார். பதவி கிடைக்கிறது என்பதால் பன்னீர்செல்வம் வந்தார். திரும்பவும் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்.

ஆர்.கே.நகரில் அவர்களுக்கு கிடைத்த படுதோல்வி தான் விரக்தியின் உச்சத்தில் நின்று கொண்டு ஏதோ தற்கொலையை பற்றி எல்லாம் பன்னீர்செல்வம் பேசுகிறார்.

நல்ல வேளை எங்களோடு இல்லை. அவரது முடிவு ஏதாவது இருந்தால் அதற்கு நாங்கள் காரணம் அல்ல.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். இதில் பன்னீர்செல்வம் பங்கு என்ன? மாணவர்களின் போராட்டத்தால் மத்திய அரசு இறங்கி வந்தது அவ்வளவுதான்.

தனிப்பட்ட பன்னீர்செல்வத்தின் பங்கு அதில் என்ன உள்ளது. அப்படியானால் அவருடன் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சென்று இருக்க வேண்டுமே?

அம்மா இறந்த பிறகு பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சராக்கியது சின்னம்மாவா? இல்லையா? என்பதை ஏன் பன்னீர்செல்வத்திடம் கேட்க மறுக்கிறீர்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சராக்கினார்கள் என்றால் எதற்கு இவரை பதவி விலக சொன்னபோது, எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் சின்னம்மாவை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் பெங்களூரு வரவேண்டி இருந்ததால் எடப்பாடியை எதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் ஓட்டெடுப்பின் போது நாங்கள் எல்லாம் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு என்று சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து ஓட்டு போட்டிருக்கலாமே? இவர் சும்மா பேசிக் கொண்டிருக்கிறார். தேனி மாவட்ட மக்களுக்கு அவருடைய முழு சுயரூபம் நன்றாகத் தெரியும். அங்கு மிகவும் பலவீனமாகிவிட்டார் என்பதால் 18 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து கவிழ்க்கப் பார்க்கிறார் என்று கூறுகிறார்.

18 சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.

அம்மாவிற்கு துரோகம் செய்த அரசு, பா.ஜ.க.விற்கு ஏஜெண்டாக இருக்கும் இந்த அரசு இருக்கக்கூடாது என்று தான் நான் சொல்கிறேன். இவை ஊருக்கே தெரியுமே. சென்ற இடங்களில் எல்லாம் இந்த அரசு இருக்கக்கூடாது என்றுதான் மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். அதற்காகத்தானே ஆர்.கே.நகரில் எனக்கு வாக்களித்தார்கள்.

எத்தனை கட்சி கூட்டணி வந்தால் என்ன? மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மக்கள் நினைப்பது தான் நடக்கும். எங்களை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

அம்மாவின் ஆட்சியை நாங்கள்தான் அமைக்க முடியும் என்று நினைக்கிறார்கள். மீண்டும் எப்பொழுது தேர்தல் வந்தாலும் நிச்சயம் நாங்கள் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்.

இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்து நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும். அதனால்தான் இந்த ஆட்சி தள்ளிப்போகிறது


விடுகதை

அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?


கருத்து கணிப்பு

தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்ற அறிவிப்பு

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *