“மக்கள் மத்தியில் தி.மு.க-வுக்கு பலம் இல்லை. ஸ்டாலின் நினைப்பது நடக்காது.” – தினகரன்


“ஸ்டாலின் எப்படியாவது முதல்வராகி விடலாம் என நினைக்கிறார். தலை கீழாகவும் நின்று பார்க்கிறார். ஆனால், அவரால் முடியாது” என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

தஞ்சாவூரில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்திவரும் தினகரன், மேலவஸ்தாசாவடியில் உள்ள அவரின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது, “சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதை வரவேற்கிறேன். ஆனால், ஒரு தேசியத் தலைவராக திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவரது படத்தை ஏதோ சாதாரண கட்சி நிகழ்ச்சியில் கார்ப்பரேஷன் மேயர் படத்தைத் திறப்பதுபோல் அவசர கதியில் திறந்துள்ளனர். இன்னும் பத்து தினங்களில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வர இருக்கிறது. அப்போது தேசிய தலைவர்களை எல்லாம் அழைத்துப் பிரமாண்டமான முறையில் அவரது திரு உருவப்படத்தை திறந்திருக்கலாம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது. அதன் பிறகு அவர்களின் ஆட்சி என்னவாகும் எனத் தெரியாது. அதனால்தான் அவசரக் கோலத்தில் திறந்துள்ளனர். பிற்காலத்தில் நாங்கள்தான் சட்டபேரவையில் ஜெயலலிதா படத்தைத் திறந்தோம் எனச் சொல்லிக்கொள்ளலாம். அதற்காக. நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் எனப் படத்தை திறக்கக் கூடாது என்று ஸ்டாலின் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் என்றால் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் மக்கள் ஜெயலலிதாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். எனவே, மக்கள் மன்றத்தின் தீர்ப்புதான் முக்கியம். மக்கள் மத்தியில் தி.மு.க-வுக்கு பலம் இல்லை. ஸ்டாலின் நினைப்பது நடக்காது. அரசியலில் இனி அவருக்கு எதிர்காலமே கிடையாது. ஸ்டாலின் எப்படியாவது முதல்வராகி விடலாம் என நினைக்கிறார். தலை கீழாகவும் நின்று பார்க்கிறார். ஆனால் அவரால் முடியாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *