கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : காற்று வீசும் மரம்; கையிலிருக்கும் மரம். அது என்ன?


புரட்சிப் பயணத்தில் தெறிக்க விடும் தினகரன் : ஆட்சி மாற்றத்திற்கு ரெடி ஆகும் எம்எல்ஏக்கள்!


தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என கூறி தமிழகத்தை செம்மை படுத்த நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் களமிறங்கி, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்பதில் கவனம் செலுத்திவருகின்றன.

இது, தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இருப்பதால், டி.டி.வி.தினகரனும் தன்னுடைய ‘மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயண’த்தைத் தொடங்கியுள்ளார். அவரது பயணம், ஜெயலலிதா பாணியில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கடந்த 2- ம் தேதி, ‘மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயணத்தை தொடங்கினார் டி.டி.வி.தினகரன். ஜெயலலிதா சுற்றுப்பயணம் எப்படி இருக்குமோ… அதுபோல, மக்களை திரட்டிக் காட்டுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

பூத்தூவுதல், ஆரத்தி எடுத்தல், பூரணகும்ப மரியாதை என்று ஒவ்வொரு பகுதிகளிலும் வரவேற்பு களை கட்டுகிறது. ஏற்கெனவே, திட்டமிடப்பட்ட இடங்களைத் தவிர, பொதுமக்கள் திரண்டு நிற்கும் இடங்களில் அவர்களிடம் பேசிக் குறைகளைக் கேட்கிறார் டி.டி.வி.தினகரன்.

பொதுக்கூட்டங்கள் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுக்கும் நிலையில், இந்த மக்கள் சந்திப்புப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள். அதுவும் மிகவும் குறைந்த செலவில் எழுச்சியுடன் கூட்டத்தைக் கூட்டமுடிகிறது என்கிறார்கள் அவர்கள்.

கடந்த மூன்று நாள் பயணத்தில், ஒவ்வோர் இடத்தில் பேசியபோதும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தே டி.டி.வி.தினகரன் பேசினார். அவரது பேச்சுக்குப் பொதுமக்களிடையே எத்தகைய ரியாக்‌ஷன் இருக்கிறது என்பதையும் ஒரு டீம் கவனித்துக் குறிப்பெடுக்கிறது.

எந்தெந்த விஷயங்களைப் பேசும்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்றுக் கைதட்டுகிறார்கள் என்பதையும் அந்த டீம் உன்னிப்பாகக் கவனிக்கிறது. அதற்கு ஏற்றாற்போல ஒவ்வோர் இடத்திலும் டி.டி.வி.தினகரன் பேச்சில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. குறிப்பாக அவர் பயணம் தொடங்கியிருப்பது தஞ்சை மாவட்டம் என்பதால், காவிரி டெல்டா மக்களின் பிரச்னைகளை முன்வைத்துப் பேசினார்.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 9 இடங்கள் என்று, பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குத் தொடங்கும் பிரசாரம் இரவு 11:30 மணிவரை நீடித்தது. கரகாட்டம், சினிமா டான்ஸ், ஒயிலாட்டம் என்று ஒவ்வோர் இடத்திலும் கொண்டாட்டங்கள் நிரம்பிவழிந்தன.

பிப்ரவரி 6ஆம் தேதி கதிராமங்கலம் சென்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராகப் போராடும் மக்களைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்த டி.டி.வி.தினகரன் அங்கே முக்கியமான ஒரு செய்தியைச் செய்தியாளர்களிடம் கூறினார்.

“எனக்கு எடப்பாடி பழனிசாமி போல குறுக்கு வழியிலெல்லாம் ஆள ஆசையில்லை. தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது. இன்னும் சில தினங்கள்தான் இந்த அரசு இருக்கும். அதன்பின் தேர்தல் வந்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி ஜெயித்து, உண்மையான அம்மா அரசை அமைப்பேன்” என்கிறார்.

அப்போது செய்தியாளர்களில் ஒருவர், “எம்.எல்.ஏக்கள் பலர் தேர்தலை விரும்பவில்லை என்று கூறப்படுகிறதே?” என்று கேட்டதற்கு,

“ஆமாம்… எம்.எல்.ஏக்கள் தேர்தலை விரும்பவில்லை என்றால் அந்த ஆறு அமைச்சர்களைத் தவிர மற்ற அனைவரையும் நாங்கள் சேர்த்துக்கொள்வோம். எனக்காக தியாகிகளாக இருக்கிறார்களே 18 எம்,எல்.ஏக்கள். அவர்களில் ஒருவரை முதல்வர் ஆக்கி இந்த ஆட்சியைத் தொடரச் செய்வேன்” என்கிறார்.

தினகரனிடமிருந்து இது மாதிரியான பதில்கள் சமீபத்தில் வந்ததில்லை.தகுதிநீக்க நீக்க வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையில்,தினகரனை இவ்வாறு பேசியிருப்பது, அவர் வழக்கின் தீர்ப்பையொட்டி பலத்த அரசியல் திட்டங்களை வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஆளும் தரப்பினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *