கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?


டிடிவி தினகரனின் புரட்சி பயணம்


# புரட்சிப்பயணம்…
**************************
இவர் இனி புதியதாக பார்க்க வேண்டிய அதிகாரம் எதுவுமில்லை…

ஒரு மாநில முதல்வரே, இவரின் முன் அமர்ந்து பேச தயங்கியதுண்டு.
இவர் கடைக்கண் பார்வை கிடைத்தால், அமைச்சராக, எம்எல்ஏக்களாக, எம்பிக்களாக பதவி பெறலாம் என எண்ணிலடங்கா நபர்கள் இவரின் கண்ணசைவுக்கு காத்தியிருந்த காலம், இன்றும் தொடர்கிறது.

மகிழ்வான குடும்பம், மனநிறைவான வாழ்க்கை என அனைத்தும் ஆண்டவன் அருளால் கிடைத்தியிருக்கிறது.

இனி யார் எப்படியாவது போகட்டும்,
நான் என் வேலையை பார்க்கிறேன் என இவர் ஒதுங்கியிருந்தால், சிறைவாசத்துக்கான அவசியமும் ஏற்பட்டியிருக்காது!

வழக்குகளும் வரிசைகட்டி நின்றியிருக்காது…!
ஆனால், அவர் எனக்கென்ன என்று ஒதுங்கவில்லை…

ஏச்சுக்கள், பேச்சுக்கள், துரோகங்கள், என அத்தனையும் சூழ்ந்து நின்றாலும்,
அடக்குமுறைக்கு அஞ்சாமல் களமாடுகிறார்….

அண்ணன் தினகரனின் பயணம் களவு போன குழந்தையை மீட்பதற்கு ஒப்பான பாசப் போராட்டம்!

அவரின் கால்கள் ஒய்வின்றி பயணிப்பது அதிமுக என்கிற ஒன்னரைகோடி தொண்டர்களின் உணர்வால் கட்டமைக்கப்பட்ட இயக்கத்தின் இதய துடிப்பை நீட்டிக்க செய்வதற்காக…!

அவரின் குரல் தொடர்ந்து அயற்சியின்றி ஓங்கி ஒலிப்பது தமிழர்களின் உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்காக…!

உறவால், உணர்வால் அதிமுகவினர் மட்டும் இவரை ஆதரிக்க வேண்டியது கட்டாயமில்லை…!

உண்மைநிலை புரிந்து தமிழரினமே இவரை ஆதரிக்க வேண்டிய நேரமிது…

தினகரன் நம்மில் ஒருவர், நம்மாலானவர்…நமக்கானவர்…
கரம் கொடுப்போம்…
கழகம் மீட்க…
தமிழகம் காக்க…
நிலைமாறா விசுவாசத்துடன்…
# தகவல்_தொழில்நுட்ப_பிரிவு
# விழுப்புரம்_வடக்கு_மாவட்டம்
#muthukumar_POST

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *