கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அடித்தால் அழுவான் , பிட்டால் சிரிப்பான்?


புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் – டி.டி.வி தினகரன்


புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் – கோர்ட்டில் டி.டி.வி தரப்பு பரிந்துரை

உள்ளாட்சி தேர்தல் போட்டியிட முடிவு செய்துள்ள டி.டி.வி தினகரன், அம்மா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட 3 பெயர்களை டெல்லி ஐகோர்ட்டில் பரிந்துரை செய்துள்ளார்.

புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் – கோர்ட்டில் டி.டி.வி தரப்பு பரிந்துரை
புதுடெல்லி:

ஆர்.கே நகரில் வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தை தனது அணிக்கு வழங்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், தனி நபருக்கு அந்த சின்னம் அளிக்கலாம் என்றும் ஒரே அணியாக உள்ளவர்களுக்கு அளிக்க முடியாது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் சின்னம் ஒதுக்குவது மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவே என தெரிவிக்கப்பட்டது. இதனால், புது கட்சி தொடங்கி அக்கட்சிக்கு குக்கர் சின்னத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று பெயர்களை தினகரன் தரப்பு இன்று கோர்ட்டில் சமர்பித்துள்ளது.

எனினும், புதிய கட்சியை உடனே பதிவு செய்வது சாத்தியமில்லை இதனால் தேர்தல் ஆணையம் இடைக்கால ஏற்பாடு செய்ய வேண்டும் என தினகரன் தரப்பில் ஆஜரான கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *