முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

விசாரணை வளையத்திற்குள் ஓ.பி.எஸ்.........ஆறுமுகசாமியிடம் சிக்கிய 24 வீடியோக்கள்

Tags : Ops, Category : TAMIL NEWS, அரசியல்,

விசாரணை வளையத்திற்குள் ஓ.பி.எஸ்………ஆறுமுகசாமியிடம் சிக்கிய 24 வீடியோக்கள் : வெளியான பரபரப்பு தகவல்!

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பிலிருந்து ஓ.பி.எஸ் அணி குறித்த 24 வீடியோக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ம் வருடம் டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 75 நாட்களும் வெளி ஆட்கள் யாரையும் ஜெ.,வை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை. எனவே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வந்தனர்.

இதனையடுத்து பதவி பறிக்கப்பட்ட ஓ.பி.எஸ்ஸும் ஜெ., மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.

அதன் பின்னர் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெ.,க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கைரேகை பதிவு பெற்ற மருத்துவர் பாலாஜி, எம்பார்மிங் செய்த மருத்துவர் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அதோடுமட்டுமல்லாமல் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாகவே இன்று மருத்துவர் பாலாஜி 3 -வது முறையாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார்.

இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பிலிருந்து ஓ.பி.எஸ் அணி குறித்த 24 வீடியோக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் அனைத்தையும் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் வழங்கியுள்ளார்.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts