கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : காற்று வீசும் மரம்; கையிலிருக்கும் மரம். அது என்ன?


மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம்.!


ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படம் முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் அமைந்துள்ளது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நிஹாரிகா மற்றும் காயத்ரி நடித்துள்ளனர். பழங்குடியினர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த வருடத்தில் இது தான் இவருக்கு முதல் படம். எந்த ஒரு நடிகரும் தயங்கும் நிலையில், எந்தவித மன உறுத்தலும் இல்லாமல் புதுமுக இயக்குனருடன் இணைந்து காமெடி படத்தில் நடித்துள்ளார். தான் ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்த பின்னும் தன்னோடு இருந்த பல பேருக்கு வாய்ப்புகள் வழங்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

அந்தவகையில் தன்னோடு பல படங்களில் பணிபுரிந்தவர்களுக்கு இந்த படத்தை வாய்ப்பாக வழங்கி இருக்கிறார். ஹர ஹர மகாதேவகி படத்தில் தன்னுடைய காமெடி நடிப்பை வெளிப்படுத்திய கவுதம் கார்த்திக், இப்படத்திலும் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். ஆந்திராவில் ஒரு காட்டில் உள்ள சிறிய கிராமத்தின் பெயர் எமசிங்கபுரம். இந்தக் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு திருடுவது தான் தொழில். எமன் தான் கடவுள். கிராம மக்களுக்கு விஜி சந்திரசேகரும், அவர் மகன் விஜய் சேதுபதியும் தான் தலைவர்கள். அங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்குமே எமனிடம் குறிகேட்டுத்தான் நடத்துவார்கள்.

அப்படி எமனிடம் குறிகேட்டு, நகரத்திற்கு திருடப் போகிறார்கள் விஜய் சேதுபதியும், அவருடைய நண்பர்கள் இருவரும். அதன்படி நிறைய இடங்களில் திருடும்போது, ஒரு வீட்டில் மாட்டப்பட்டுள்ள போட்டோவைப் பார்க்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோயின் நிஹாரிகா வீடு தான் அது. நிஹாரிகா கல்லூரி ஒன்றில் கெளதம் கார்த்தியுடன் படித்து கொண்டிருப்பவர். நிஹாரிகாவை கடத்திக் கொண்டு அவரது காட்டிற்கு செல்கிறார் விஜய் சேதுபதி. நிஹாரிகாவை காப்பாற்ற கவுதம் கார்த்திக்கும் அவரது நண்பர் டேனியேலும் எமசிங்கபுரதிற்கு செல்கின்றனர். விஜய் சேதுபதி ஏன் அப்படிச் செய்கிறார் என்பதற்கான முடிச்சு, காட்டுக்குள் சென்ற பிறகு அவிழ்கிறது.

தன்னுடைய 14 வருட தவ வாழ்க்கையை விவரிக்கும் இடத்தில் 4 நிமிட நீளமான வசனத்தை ஒரே டேக்கில் விஜய் சேதுபதி பேசி அசத்தியுள்ளார். மேலும், அவருடன் இணைந்து கவுதம் கார்த்திக், ரமேஷ் திலக், ராஜ்குமார், டேனியல், காயத்ரி என அனைவரும் காமெடி செய்வதில் மெனக்கெட்டு நடித்துள்ளனர். ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும்போதே நல்ல கேரக்டருக்காக செகண்ட் ஹீரோ அளவுக்கு இறங்கி நடித்ததற்காகவே பாராட்டலாம்.

நிஹாரிகா அறிமுக படத்திலே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பழங்கால செட்டுகள், உடை அலங்காரம் போன்றவைகள் படத்திற்கு பெரிய பலம். ஃபேண்டஸி கதையாக இருப்பதால், லாஜிக் பார்க்காமல் காமெடி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் ஆறுமுக குமார். ஜஸ்டின் பிரபாகரன் மட்டும் இசையின் மூலம் கவர்கிறார். ஸ்ரீசரவணனின் ஒளிப்பதிவில் நகரம் மற்றும் காடு சம்பந்தப் பட்ட காட்சிகளை அருமையாக கையாண்டு இருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிற்காக பார்க்கலாம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *