தினகரனிடம் ஆடி காருக்கு அடிபோட்ட நாஞ்சில் சம்பத்!
Tags : Nanjil Sampath, Category : அரசியல்,
கன்னியாகுமரி: இன்னோவா காரை கொடுத்ததே ஆடி காருக்கு அடி போடத்தான் என்று கூறுவது பொய் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.டிடிவி தினகரன் தொடங்கிய அமைப்பின் பெயர் பிடிக்கவில்லை என்று கூறிய நாஞ்சில் சம்பத் அக்கட்சியிலிருந்து விலகினார்.இதுகுறித்து நாஞ்சில் சம்பத் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், மார்ச் 15-ஆம் தேதி தினகரன் அமைப்பை தொடங்கியுள்ளார். அதில் அண்ணாவும், திராவிடமும் தூக்கி எறியப்பட்டுள்ளது. தத்துவத்தை மையமாக வைத்தவன்தான் தலைவன். ஆனால் இங்கு தத்துவமே தகராறாகிவிட்டதே. இதுகுறித்து நான் பேச முனைந்தபோதெல்லாம் அவர் என் போன் லைனுக்கு வரவே மாட்டார். அண்ணாவும் திராவிடமும் என்பது என் உள்ளத்தில் இருக்கிற ஒளி. அந்த ஒளியை மறைத்து வைத்துவிட்டு என்னை பேச சொன்னால் பேச்சாளராகிய என்னால் எதையும் பேச முடியாது. அம்மா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்திருக்கலாமே. டிடிவி தினகரனை விட்டு வெளியே வந்ததில் மகிழ்ச்சியாகதான் உள்ளேன்.
டிடிவி தினகரன் என்ற தனி மனிதன் மீது எனக்கு கோபம் இல்லை. அவர் தொடங்கிய அமைப்புதான் எனக்கு பிடிக்கவில்லை. என்னுடைய தத்துவத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. திராவிடம் என்ற கான்செப்டை துணிச்சலாக எடுத்து விட்டனர். அதிமுகவும், டிடிவி தினகரன் அணியும் இணைந்தாலும் நான் செல்லமாட்டேன். கட்சி அரசியலுக்கே நான் முழுக்கு போட்டுவிட்டேன். நான் வேறு கட்சியில் சேர்ந்துவிடுவேன் என்று குரைப்பவர்கள் குரைத்துக்கட்டும்.
நான் இனிமேல் யாரிடமும் சென்று நிற்கமாட்டேன். 100 சதவீதம் சுயமரியாதைக்காரன். என்னது ஓபிஎஸ்ஸை போய் பார்ப்பேனா என்று அருவருக்கத்தகுந்த கேள்வியை கேட்கிறீர்களே. பேரை மாற்றுவார்களா என்று கேட்டு சொல்லுங்கள் , டிடிவி அணிக்கு போவதா வேண்டாமா என்பதை பார்த்து கொள்ளலாம்.
இன்னோவா காரை அவங்க கொடுத்தாங்க, நான் வாங்கிக் கொண்டேன். ஆடி காருக்கு அடி போடுகிறேன் என்று கூறுவதெல்லாம் பொய். கார் பயணமே சுமையானது , ரயில் பயணம்தான் எளிதானது. இனி ஒரு தலைவனை ஏற்றுக் கொள்கிற நிலையில் இல்லை. இனி ஒரு கொடியை ஏந்துகிற இடத்திலும் நான் இல்லை.
Share : Follow @kollywoodnew Tweet
Related Posts
தமிழகத்தில் இளைஞர்கள் விரும்பும் தலைவராக டி.டி.வி.தினகரன் உள்ளார்
தமிழகத்தில் இளைஞர்கள் விரும்பும் தலைவராக டி.டி.வி.தினகரன் உள்ளார் தமிழகத்தில் இளைஞர் கள் விரும்பும் தலைவராக டி.டி.வி.தினகரன் உள்ளார் என்று கடலூரில்
TTV தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்
பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை
டிடிவி தினகரனோடு பயணிக்க நான் விரும்பவில்லை! – நாஞ்சில் சம்பத்!
அண்ணாவும், திராவிடமும் இல்லத்தக்க இடத்தில் எனக்கு வேலை இல்லை, நான் தினகரன் அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன் என்று நாஞ்சில் சம்பத்
அளவுக்கு அதிகமாக நாஞ்சில் சம்பத் புகழும்போதே, என்றாவது ஒருநாள் தூக்கி கீழே போட்டுவிடுவார்
என்னை அளவுக்கு அதிகமாக நாஞ்சில் சம்பத் புகழும்போதே, என்றாவது ஒருநாள் தூக்கி கீழே போட்டுவிடுவார் என நினைத்தேன் என தினகரன்
ஜெயலலிதா மரணம் ஓபிஸை விசாரிக்காதது ஏன்? : நாஞ்சில் சம்பத்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விசாரிக்க சம்மன் அனுப்பாதது ஒரு தலைப்பட்சமானது என டிடிவி