கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?


மல்லுக்கட்டிய டி.டி.வி.தினகரன் – ஓ.பி.எஸ் மகன் ஆதரவாளர்கள்!

தேனி மாவட்டத்தில், தனது ஆதரவாளர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வதற்காக டி.டி.வி.தினகரன் நேற்று தேனி வந்தார். திருச்சியிலிருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக திண்டுக்கல் வழியாக தேனி வந்தடைவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி திருச்சியிலிருந்து புறப்பட்ட தினகரனுக்கு, வழியெங்கிலும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் டி.டி.வி.தினகரனின் வருகைக்காக அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். இந்தச் சூழலில், வரும் 11-ம் தேதி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான பேனர்களை ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவி தலைமையில், அவரது ஆதரவாளர்கள் சாலை ஓரத்தில் அமைத்துக்கொண்டிருந்தனர்.

தினகரன் வரும் நேரம் என்பதால், தற்போது பேனர் அமைக்கக் கூடாது என்று போலீஸார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ரவி மற்றும் அவரது ஆதரவாளர்கள், சாலை விதிகளை மீறி தினகரன் ஆதரவாளர்கள் வைத்திருக்கும் பேனர்களை உடனே அகற்ற வேண்டும். முறையாக அனுமதிபெற்றதால் நாங்கள் பேனர் வைப்போம் என்று கூறியுள்ளனர். இதை போலீஸார் ஏற்க மறுக்கவே, சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர் ரவியின் ஆதரவாளர்கள். அந்நேரம், ரவி உடனே புறப்பட்டுச்சென்றுவிட்டார். அவரது ஆதரவாளர்கள் திண்டுக்கல் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேரம் ஆக ஆக ரவியின் ஆதரவாளர்கள் அதிகமானோர் திரண்டனர். இதனால், அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

இதே நேரம், டி.டி.வி. தினகரன் தேனி மாவட்ட எல்லையான காட்டுரோடு பகுதியை அடைந்தார். பெரியகுளத்தில் ரவியின் ஆதரவாளர்களின் சாலை மறியல் போராட்டம் பற்றித் தெரிந்ததும் அமைதியானதாகவும், சிறிது நேரம் கழித்து, ‘வாங்க பார்த்துக்கலாம்!’ என்று சொல்லி புறப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினகரனை தடுத்த காவல்துறையினர், அவர்களை அப்புறப்படுத்திய பிறகு செல்லலாம் என்றும் கூறியிருக்கிறார்கள். அதை மறுத்த தினகரன், உடனே புறப்பட்டிருக்கிறார். பெரியகுளத்தை தினகரன் அடைவதற்குள், போலீஸார் குவிக்கப்பட்டு சாலைமறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போக்குவரத்தை சீராக்கினர். தினகரன் பெரியகுளத்தைத் தாண்டும்போது, அவருக்கு எதிராக சாலை ஓரம் நின்றிருந்த ரவியின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். அதற்கு எதிராக தினகரன் பின்னால் வந்த வாகனங்களில் இருந்த அவரது ஆதரவாளர்களும் பன்னீர்செல்வத்துக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். இதனால் சிறுநேரம் பெரியகுளம் பகுதி, பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டது. ரவியின் இந்த நேரடி எதிர்ப்பு, தினகரன் தரப்பினர் மட்டுமல்ல; தினகரனே சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என்று கூறப்படுகிறது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *