கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?


48-வது நாளாக நீடிக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு

சென்னைதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48-வது நாளாக நீடிக்கிறது.தூத்துக்குடியில் இயங்கி வரும் தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏராளமான நோய்களும் உருவாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்று 48-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அங்கேயே சமைத்து சாப்பிடுவதோடு வீடுகளுக்கு செல்லாமல் அங்கேயே உறங்கி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.இதனிடையே நேற்று முன்தினம் முதல் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.அவர்களது போராட்டத் துக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தூத்துக்குடி வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் கனகராஜ், த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் ஆகியோரும் அ.குமரெட்டியாபுரத்திற்கு வந்து பொதுமக்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி நிறுவனர் பொன்ராஜ் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அங்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  இன்று போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து அவர்களோடு போராட்டத்தில் பங்கேற்பதாகவும் அவர் அறிவித்தார்.இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று  47 நாட்களா  அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது. என கூறி உள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *