அரசியலில் ஊறிய அரசியல்வாதிகள் கூட தினகரனிடம் பாடம் படிக்க வேண்டும்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு 29-ஆம் தேதி வரை பொறுத்திருப்போம், பின்னர் பார்த்துக் கொள்ளலாம், என துணை முதல்வர், ஓபிஎஸ். தெரிவித்தார். ஆனால், அந்த கெடு தேதி நெருங்குவதற்கு முன்பாகவே, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது, என்பதை திட்டவட்டமாகச் சொல்லி விட்டது.உச்சநீதிமன்ற உத்தரவை, மத்தய அரசு நிறைவேற்றாமல், அதற்கு மாற்று ஏற்பாடு செய்வதாக சொல்லி ஏமாற்றி இருக்கிறது. காவரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? ஏன் இத்தனை இழுபறி?    தமிழகத்தில் பாஜகவிற்கு, நோட்டாவை விடக் கம்மியான வாக்கு வங்கிகளே உள்ளன. அதனால், இனி தமிழகம் நமக்கு தேவையில்லை, என்று பாஜக. உதறி விட்டுள்ளது, என்பது தான் உண்மை!. இப்போது, ஓபிஎஸ், என்ன செய்யப் போகிறார்? என்று எதிர்க்கட்சிகள், கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.    இந்த நிலையில், புதிதாகக் கட்சி ஆரம்பித்துள்ள தினகரன், எல்லாரையும் முந்திக் கொண்டு, நேற்று தஞசையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உண்ணா விரதம், என்று மேடை போட்டு அமர்ந்திருந்தார்.    மேடையில் பேச வந்த ஆதரவாளர்கள் அனைவரும், தினகரன், சசிகலா புகழைத் தான் பாடினார்கள். காவிரி நீரைப் பற்றியோ, மேலாண்மை வாரியத்தைப் பற்றியோ பேசவேயில்லை. உண்ணா விரத மேடையே பிரம்மாண்டமாகத் தான் இருந்தது.வந்திருந்தவர்கள், காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் என்பதை மதியமே தெரிந்து விட்டது. 12 மணிக்கு மேடைக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடை திறந்ததும், உண்ணா விரதத்திற்கு வந்திருந்த கூட்டம், ஓடிச் சென்றது.     இன்னொரு கும்பல் திலகர் திடலில் உள்ள அம்மா உணவகத்திற்குள் நுழைந்து, மதிய உணவை வெட்டிக் கொண்டிருந்தது. இதனைக் கவனித்த பத்திரிகையாளர்கள், அவர்களை படம் எடுக்க முற்பட்ட போது, ஒரு கும்பல் செய்தியாளர்களைத் தாக்கியது. எல்லாம் அரசியல் நாடகம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது, இந்த போலி உண்ணாவிரதம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *