கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : பூவிலே வெள்ளைப் பூ; பூமியை நோக்கும் பூ; அது என்ன?


குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க உதவுமாறு விமானப்படைக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு

கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் குரங்கணியை நோக்கி மலையேறும் பயிற்சியை மேற்கொண்டனர். அப்போது அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. காட்டுத்தீயில் 40-க்கும் அதிகமான மாணவிகள் சிக்கி உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாணவிகளை மீட்க காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் உள்ளூர் மக்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மாணவிகளை பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கையானது நடைபெற்று வருகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே குரக்கணி காட்டுத்தீவில் சிக்கிய மாணவிகளை மீட்க உதவுமாறு விமானப்படைக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார். 

தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க விமானங்களை அனுப்ப மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார். காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிக்கு மீட்பு பணிகளுக்கு இந்திய விமானப்படை அனுப்பப்படும், தென் பிராந்திய காமண்டர், தேனி ஆட்சியருடன் தொடர்பில் உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்து உள்ளார்.

கோவை மற்றும் அரக்கோணத்தில் இருந்து மீட்பு பணிக்கு மீட்பு பணிக்கு விமானப்படை விரைந்து உள்ளது எனவும் விமானப்படை மீட்பு குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மீட்பு பணிக்கு முதல்கட்டமாக ஹெலிகாப்டர்கள் விரைந்து உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.மாணவர்களை மீட்டுவர எல்லா முயற்சியும் எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறிஉள்ளார். 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *