கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?


பெரியார் சிலை விவகாரம், முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் : எச்.ராஜா

சென்னை: பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக எச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்படும் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, இதுபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

எச் ராஜாவின் இந்த பதிவு தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எச் ராஜாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அவரது கொடும்பாவியும் பல இடங்களில் எரிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எச் ராஜா பெரியார் சிலை குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார்.

எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை.

எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது. இவ்வாறு எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *