முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

டிடிவி தினகரன் கட்சியை கிண்டல் செய்த ஜெயக்குமார்!

Tags : Jayakumar, TTV Dhinakaran, Category : TAMIL NEWS, அரசியல்,

அதிமுகவின் மற்றொரு பிரிவாக செயல்பட்டுவரும் தினகரன் ஆர்.கே சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அந்த சின்னத்தையே தமது அணிக்கு ஒதுக்கிடும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது.

சில நாட்களுக்கு முன்னதாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளதுடன், அவர் பரிந்துரைத்துள்ள 3 பெயர்களில் ஏதேனும் ஒன்றினை வழங்கிடுமாறும் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, வரும் 15 ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கவுள்ளார்.

தினகரனின் கட்சி பெயர் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், தில்லு முள்ளு முன்னேற்ற கழகம் என தினகரன் துவங்கும் கட்சிக்கு பெயர் வைக்கலாம்” என நகைச்சுவை தொனியில் தெரிவித்துள்ளார்.

 

 


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts