தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

TTV தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்

By Admin - March 17th, 2018

Tags : Nanjil sampath, TTV தினகரன், நாஞ்சில் சம்பத், Category : Tamil News,

பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது சசிகலா அணியில் நாஞ்சில் சம்பத் பணியாற்றி வந்தார்.

சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியை டிடிவி தினகரன் வழிநடத்தியபோது அவருக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பொது மேடைகளிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் வலுவாக குரல் கொடுத்து வந்தார்.

தற்போது டிடிவி தினகரன் புதிதாக அரசியல் அமைப்பை தொடங்கி உள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் திடீரென தினகரன் அணியில் இருந்து விலகி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என டிடிவி தினகரன் நம்புகிறார். அவரது நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால், அதில் நான் இல்லை. இனிமேல் நான் எந்த அரசியலிலும் நான் இல்லை.

டிடிவி தினகரனின் அநியாயத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவருக்கு எதிர்வினையாற்ற மாட்டேன். அரசியல் தமிழில் இனி அடைபட்டுக் கிடக்க மாட்டேன். இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்” என்றார்.

Related Posts

டிடிவி தினகரனோடு பயணிக்க நான் விரும்பவில்லை! – நாஞ்சில் சம்பத்!

அண்ணாவும், திராவிடமும் இல்லத்தக்க இடத்தில் எனக்கு வேலை இல்லை, நான் தினகரன் அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன் என்று  நாஞ்சில் சம்பத்…

கிரண்பேடி ஆணா? பெண்ணா? நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிஆணா?பெண்ணா? என தெரியவில்லை என்று திமுகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….

தமிழகத்தில் இளைஞர்கள் விரும்பும் தலைவராக டி.டி.வி.தினகரன் உள்ளார்

தமிழகத்தில் இளைஞர்கள் விரும்பும் தலைவராக டி.டி.வி.தினகரன் உள்ளார் தமிழகத்தில் இளைஞர் கள் விரும்பும் தலைவராக டி.டி.வி.தினகரன் உள்ளார் என்று கடலூரில்…

ஜெயலலிதா மரணம் ஓபிஸை விசாரிக்காதது ஏன்? : நாஞ்சில் சம்பத்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விசாரிக்க சம்மன் அனுப்பாதது ஒரு தலைப்பட்சமானது என டிடிவி…

தினகரனிடம் ஆடி காருக்கு அடிபோட்ட நாஞ்சில் சம்பத்!

கன்னியாகுமரி: இன்னோவா காரை கொடுத்ததே ஆடி காருக்கு அடி போடத்தான் என்று கூறுவது பொய் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.டிடிவி…




அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share