டிடிவி ஆதராவாளர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!


ராமதநாதபுரத்தில் டிடிவி தினகரன் அணி ஆதரவாளர்கள் இருவரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கொத்த தெருவில் டிடிவி தினகரனின் இலக்கிய அணி செயலாளராக இருப்பவர் தவமுனியசாமி. இளைஞர் அணி செயலாளராக இருந்து வருபவர் கமல். இவர்கள் இருவர்களது வீடும் அருகிலருகில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தவமுனியசாமி மற்றும் கமல் ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த இருவரும், அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய அந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விடுகதை

சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்?


கருத்து கணிப்பு

கமல் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*