கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?


குரங்கணி மலையில் காட்டுத்தீ போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள்: முதல் அமைச்சர் பழனிசாமி

மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். 

மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  வனத்துறையினருடன் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் சேர்ந்து தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.இந்த நிலையில், குரங்கணி மலையில் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

காட்டுத்தீயை அணைப்பதற்காக மற்றும் மீட்பு பணிக்காக சூலூரிலிருந்து புறப்பட்ட கமாண்டோக்கள் குழு மதுரை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது.  அவர்கள் அங்கிருந்து மலைப்பகுதிக்கு புறப்பட்டு சென்றது. 

அதன்பின் அவர்கள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.இதேபோன்று தீயணைப்பு, வனத்துறை, வருவாய் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *