தினகரன் வைத்த அடுத்த செக்! ஓபிஎஸ் – இபிஎஸ் கலக்கம்!

அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களால், அதிமுக அணிஅணியாக பிரிந்து பின்பு ஒன்றிணைந்து இபிஸ் முதலமைச்சராகவும், ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும் இருந்து வருகின்றனர். ஏற்கனவே 20 MLAக்கள் தினகரன் அணியில் இருப்பதால் எப்போது ஆட்சி கவிழும் என்ற நிலையில், ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், தற்போது புதிய நெருக்கடியாக, தமிழக அரசியலில் புதிய வரவாக வருகிறது தினகரனின் கட்சி.

டிடிவி தினகரன் மேலூர் மாநாட்டிற்காக பந்தல்கால் நடும் விழா

டி.டி.வி.தினகரனுக்கு பிர‌ஷர் குக்கர் சின்னத்தையும் அவர் கோரும் கட்சியின் பெயரையும் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டதை தொடர்ந்து தினகரன் உற்சகமாக செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் தினகரன் நேற்று ஆலோசனை செய்தார்.

ஏற்கனவே கட்சியின் பெயராக, அனைத்திந்திய அம்மா அண்ணா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா திராவிடர் கழகம் ஆகிய 3 பெயரை குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பெயரை தனக்கு ஒதுக்குவார்கள் என தினகரன் உறுதியாக இருக்கிறார்.

 

நிர்வாகிகளுடன் ஆலோசித்த தினகரன் கட்சி கொடி நிறங்கள் குறித்தும், ஆர்.கே. நகரில் வெற்றி கொடுத்த குக்கர் சின்னம் குறித்தும் கருத்து கேட்டார். கூட்டத்தில் ஒவ்வொரு நிர்வாகிகளும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அனைத்தையும் பொறுமையாக கேட்ட தினகரன், வரும் 15-ம் தேதி மதுரையில் புதிய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றே கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்துகிறார்.

ஏற்கனவே தொண்டர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், அதிமுகவினர் பலர் தினகரனின் கட்சியில் இனைய ஆர்வமாக இருப்பதாகவும், வருவாய் இல்லாத அதிருப்தி நிர்வாகிகள் தினகரன் கட்சிக்கு தாவ வாய்ப்பு உள்ளதால் ஓபிஎஸ், இபிஸ் கலக்கம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *