தினகரன் சிரித்து கொன்டே வீசும் சூராவளி

ஆனந்த். ஏ
12 .03 .18

சமரசம் (இனிக்கும்விஷம்)

டிடிவி தினகரன் எடப்பாடியுடன் சமரசம் செய்து கொண்டு ஆட்சியில் பங்குகொள்ள வேண்டும். என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி வடக்க இருந்து ஒரு சத்தம் கேட்டுச்சி கேட்டிங்களா .

தன் மண்னையும் மக்களையும் வாழும் வாழ் கை முறையையும் சிதைக்க நினைக்கும் சக்திகளை முழு வீரியத்துடன் எதிர்த்து நிற்கும் பூர்வகுடியின் முன்னால் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாதென்று தெரிந்ததும் அவனை அழிக்க உலக அரசியலில் பண்படுத்தப்படும் ஆயுதம் சமரசம் .

ஆம் இது இனிக்கும் விஷம் .
.
.
நிற்க .

அமெரிக்காவின் பூர்வகுடிகள் செவ்விந்தியர்கள் அவர்களின் நிலபரப்பை ஆக்கிரமிக்க நினைத்து அமெரிக்கா சாதாரண பூர்வகுடிகள்தானே .! என நினைத்து கைவைக்க வைத்த கையை வெட்டி வெள்ளை மாளிகைக்கு அனுப்பி விட்டனர் . அமெரிக்க வீரர்களின் குருதியில் வாசல் தெளித்து கோலம் போட்டு விளையாடியது செவ்விந்திய பெண்கள் .

பிறகென்ன சமரசம் தானே .. அமெரிக்க கழகு பார்வை செவ்விந்திய கூட்டத்தில் இருக்கும் ops EPS ஐ அடையாளம் கண்டது .
அமெரிக்க அரசு இனி உங்கள் நலனுக்காகவே வாழும் என தலையில் அடித்து சத்தியம் செய்தது .

கடும் குளிரை தாங்கும் கம்பளி போர்வை செவ்விந்தியர்களுக் நல திட்ட உதவியாக வழங்கியது அமெரிக்கா …. ஒரிரு வாரத்தில் . பிணம் …. பிணம் .. பிணக்குவியல் செவ்விந்திய பிணங்கள் என்ன நடக்கிறது என்று யோசித்து முடிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது .பிறகு தான் தெரிந்தது கம்பளி போர்வையில் தட்டம்மை நோய் கிருமிகள் தடவ பட்டு வழங்க பட்டது என்று .

ஆம் .. துரோகத்துக்கு உலக அரசியல் வைத்த பெயர் ராஜதந்திரம் .

நிற்க …

பிஜேபியின் கையில் கிடைத்த இந்தியாவும் . பைத்தியகாரன் கையில் இருக்கும் கத்தியும் ஒன்று தான் . .

தன் முழு பலத்தையும் தினகரன் எனும் ஆளுமையின் பலம் தெரியாமல் முட்டி மோதி மண்டை வீங்கி விழி பிதுங்கி நிற்கிறது .

அவர்கள் வீசிய அத்துனை ஆயுதங்களையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளும் வீரம்
அவர்கள் எதிர்பார்காத ஒன்று .இருப்பது ஒரு உயிர்போனால் போகிறது என்று சிரித்து கொண்டே சொல்லும் போது தான் விளங்கியது .மண்னின் பூர்வகுடி தமிழ் சமூகத்து வீரம் .

பிறகு தான் ஈனசுரத்தில் ஒலிக்க ஆரம்பித்தது .. சமாதானம் .

அதையும் ஒற்றை சொல்லில் ஓங்கி அடித்தான் .பிஜேபிக்கு ஒரே போதும் என் மண்ணில் இடமில்லையென .

தினகரன் சிரித்து கொன்டே வீசும் சூராவளி .

விழுவான்
எழுவான்
வீழ்ந்து போக மாட்டான் .
ஏனென்றால் .. அவன்

# ம க் க ள் செ ல் வ ர் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*