கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : பூவிலே வெள்ளைப் பூ; பூமியை நோக்கும் பூ; அது என்ன?


ஆர்.கே.நகர் மக்களை டிடிவி தினகரன் ஏமாற்றி விட்டார் : அமைச்சர் மணிகண்டன்

ஆர்.கே.நகர் மக்களை டிடிவி தினகரன் ஏமாற்றி விட்டதால் தொகுதி மக்கள் அவரை தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், ஆர்.கே.நகரைப் போல தமிழகம் முழுவதும் தினகரன் ஏமாற்ற முடியாது என்று தெரிவித்தார்.
தங்கள் கட்சி, சின்னம், கொடி ஆகியவற்றை தினகரன் அணியினர் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்த அமைச்சர் மணிகண்டன், தங்களிடம் தினகரன் அணியினர் வந்து சேர வேண்டும் என்றும் கூறினார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *