போராட்டத்தில் டிடிவி தினகரன்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் இதற்கு  மாற்று அமைப்பு வேண்டாம் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் திரண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

காவிரி நீர் பங்கீட்டு தொடர்பாக ஒழுங்குமுறை குழுவை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. அந்த கெடு வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

கர்நாடக அரசு  முற்றிலும் இதற்கு எதிர்ப்பாகவே இருந்து வருகிறது. சசிகலாவின் கணவர் இறந்து சில தினங்களே ஆகும் நிலையில் துக்கம் இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் உண்ணாவிரதத்தை நடத்துங்கள் என சசிகலா தினகரனிடம் கூறியுள்ளார்.இந்த நிலையில் புதுக்கோட்டை, திருச்சி,மதுரை  போன்ற மாவட்டங்களிலிருந்தும் தினகரனின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என போராட்டம் செய்துவருகின்றனர்.

போராட்டத்தில் தினகரன் கூறுகையில்  தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளை மத்திய அரசு  ஏமாற்றுகிறது. தமிழகத்தின் நலன் தொடர்ந்து அழிக்கப்பட்டுவருகிறது. விவசாயத்தை அழித்துவிட்டு எண்ணெய் எடுப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், வைரம் எடுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் தமிழகமும் சோமாலியாவைப் போல மாறும் அபாயம் உள்ளது என கூறினார். அனைத்து கட்சியினரும் இணைந்து போராட வேண்டும். உச்சநீதிமன்றம் கூறினால் ஹஜ் யாத்திரைக்கான மானியத்தை நிறுத்துகின்றனர்.

ஆனால் உச்சநீதிமன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *