கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?


அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறாரா விஜய் ? – மதுரையில் போஸ்டர்!

இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தனது படங்களின் மூலம் தமிழ் நாட்டின் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசக்கூடிய தைரியமான நடிகர்.

சமீபத்தில் கூட ஜிஎஸ்டிக்கு எதிராக மெர்சல் படத்தில் பேசிய வசனம் பிஜேபி கட்சியை சார்ந்தவர்களை பெரும் கோபத்துக்கு கோபத்துக்கு ஆளாக்கியது .

இந்நிலையில் அவ்வப்போது அவர் அரசியலில் குத்துக்கவுள்ளார் என்ற செய்தி வரும், அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கு விஜய் அரசியலில் வரவேண்டும் என்ற விருப்பம் இருக்கு.

இந்நிலையில் இன்று மதுரை முழுக்க “ஜூன் 22-ல் முடிவெடுக்கிறார் விஜய்” என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. ‘தின விஜய்’ நாளேடு என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும் அந்தச் சுவரொட்டிகளில் அதன் நிறுவனர் விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார் என்றும், தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம் என்றும் கூடுதல் ஹைப் ஏத்துகின்றன அந்தச் சுவரொட்டிகள். இதோடு “மக்கள் மகிழ்ச்சி, கட்சிகள் அதிர்ச்சி, விவசாயிகள் வரவேற்பு, திரை உலகினர் வாழ்த்து” என்ற பஞ்ச் வசனங்களும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

மதுரையின் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் இந்தச் சுவரொட்டிகளை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அரசியல் மாற்றங்களின் களமாக மதுரை மாறிப் போயிருக்கிறது. ஆனால் இப்போது வரை எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை.

அதே சமயம் மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை பொருத்தவரை, விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டேயிருக்கும் இளம் ரசிகர்களின் எண்ணம். அவர்களே இதனைச் செய்திருக்கின்றனர் “ என கூறுகின்றனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *