முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

வெஜிடபிள் பிரியாணியை வெளுத்து வாங்கிய அதிமுக உண்ணாவிரதம்!

Tags : Aiadmk, Cauvery Issue, EPS, Ops, Category : TAMIL NEWS,

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக உண்ணாவிரதம் இருக்கும் அ.தி.மு.க-வினர் தயிர், தக்காளி, வெஜிடபிள் பிரியாணியை வெளுத்து வாங்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் இன்று காலையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டிருக்கும் நிலையில் மாவட்டம்தோறும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி வேலூரில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நீலோபர் கபில் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. அந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க தொண்டர்கள் கரை வேட்டிகளுடன் காலை முதலே உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் இருக்கும் ஜனனி பிக் பஜார் பகுதியில் இருந்த ஹோட்டல்களில் தஞ்சமடைந்தார்கள். அங்கு இட்லி, பூரி, பொங்கல், டீ, காபி எனப் போராட்டத்தைத்(!?) தொடங்கினார்கள்.

அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் உண்ணாவிரதப் பந்தலுக்கு அருகே இருக்கும் மீடியா அலுவலகத்தில் மதிய உணவாகத் தயிர், தக்காளி, லெமன் சாதங்கள் மற்றும் வெஜிடபிள் பிரியாணி போன்றவைகள் சூடாக வந்திறங்கின.

உண்ணாவிரதப் பந்தலிலிருந்து தொண்டர்கள், மகளிரணியினர் பகுதி பகுதியாகப் பிரிந்து வந்து சாப்பிடும் போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. “இதுவும் காவிரி மேலாண்மைக்கான போராட்டம்தான். ஆனால், இது உண்ணும் போராட்டம்” என்று கலாய்த்துச் செல்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts