உண்மை காதலுக்கு ஓர் உயர்ந்த உதாரணம் அஜித் ஷாலினி! எத்தனை பேருக்கு இது தெரியும்..

அஜித் சினிமா திரையில் வந்தாலே போதும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவரின் உதவி செய்யும் மனப்பான்மை, அனைவரையும் அன்புடன் மதித்தல் என நண்பர்களாகவே பலரை வைத்திருக்கிறார்.

சுயவாழ்வில் எவ்வளவு சோதனைகளை கடந்து இந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அப்படியிருக்கையில் காதல் ஆசை இவரையும் விட்டு வைத்ததா என்ன?அமர்க்களம் படத்தில் தான் இருவருக்குள்ளும் அந்த காதல் இவருக்கு வெளிப்பட்டது என சொல்லலாம்.

ஷாலினியுடன் அவரின் காதல் நீண்ட நாளாக தொடர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலும், அன்பும் இருந்து வருகிறது. பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்த இவர்கள் 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் இதே நாள் சென்னையில் திருமண உறவில் இணைந்தார்கள். அமர்க்களம் படத்தின் போது அஜித்தால் ஷாலினிக்கு எதிர்பாராத விதமாக கையில் சிறு ரத்தக்காயம் உண்டானது.

இதனால் அஜித் மிகவும் வருந்தினாராம். இது கூட அவர்களின் காதலை இன்னும் ஆழமாக்கியது எனலாம். ஓய்வின் போது அஜித் நேரில் சென்று அவரை பார்த்தாராம். அதன் பிறகு ஷாலினி அஜித்திற்கு தன் சார்பாக அஜித்திற்கு என்னென்ன பிடிக்குமோ அதை எல்லாம் வாங்கி பிறந்தநாள் பரிசாக அனுப்பினாராம். 1999 ல் ஆகஸ்ட் மாதம் வெளியான அமர்க்களம் படம் நல்ல கமர்சியல் ஹிட். அன்றிலிருந்து இன்று வரை அஜித்தின் வெற்றிக்கு பின்னால் ஷானிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. சினிமா பிரபலங்களில் திருமண வாழ்க்கையை முறையாக வாழும் இந்த ஜோடி உண்மை காதலுக்கும், உண்மையான காதலர்களுக்கும் ஒரு உயர்ந்த உதாரணம் என்றே சொல்லலாம். . இந்த ஏப்ரல் 24 ம் நாளில் 18 வருட திருமண வாழ்க்கை கடந்து 19 ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

எனவே மகிழ்ச்சியுடன் அவர்களை சினிஉலகம் திருமணம் நாள் வாழ்த்துக்களை அவர்களுக்கு பகிர்ந்துகொள்கிறது. ரசிகர்களும் இதை #HappyWedAnniversaryTHALA என Tag ல் கொண்டாடிவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *