கருத்துகணிப்பு : ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் யார் ?


விடுகதை : கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?


கணவனை நேசிக்கும் ஒவ்வெரு மனைவியும் தெரிந்து கொள்ள வேண்டியவை

 

ராணி அன்று தன் கணவனுக்கு பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்…!!இன்று எப்படியும் கணவனிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்… தெரு முழுவதும் மீன் குழப்பு வாசனை.. கணவன் குமார் வந்ததும்..ராணி வேகமாக வந்து…குடிக்க தண்ணீர் தந்து, சாப்பிட அமர சொன்னாள்..!!                 ராணி சாப்பாடு பரிமாரினாள்..

குமார் சாப்பிட தொடங்கினான்.ராணி கேட்டாள்.. “என்னங்க குழம்பு எப்படி இருக்கு”..? என்றுகுமார்.. “நல்லா இருக்கு, ஆனாலும் எங்க அம்மா கைப்பக்குவம் உனக்கு இல்ல..எங்கம்மா வைப்பாங்க பாரு மீன் குழம்பு.. தெருவே மணக்கும்… ருசி அப்பப்பா.. சூப்பரா இருக்கும் என்றான்..!!அம்மா குழம்பின் ருசியை பாராட்டி…சாப்பிட்டு முடித்து எழுந்தான்..!!

ராணிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..கணவன் தன் குழம்பின் ருசியை பாரட்டாததை நினைத்து..’எப்ப பாரு அம்மா..அம்மா’னு.. அவரு அம்மா’வ தான் தூக்கி வச்சி பேருவாரு..!!’ என்று முணு,,முணுத்தாள்.!!அப்போது ராணியின் 15 வயது மகன் சாப்பிட வந்தான்…ராணி சாதம் எடுத்து வைத்தாள்… மகன் ஒரு வாய் சாதம்.. சப்பிட்டு விட்டு தன் அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான்..!!

அம்மா சூப்பர் மா.. எப்படிம்மா இப்படி சமைக்குறீங்க..? தெருவே மணக்குதும்மா..!! உங்க அளவுக்கு யார்னாலையும் மீன் குழம்பு வைக்க முடியாதும்மா… என்று பாராட்டினான்..!ராணிக்கு புரிந்தது…

ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும், எவ்வளவு ருசியாய் சாப்பிட்டாலும், தன் தாயின் குழம்பை மட்டும் தான் அதிகம் பாராட்டுவான் என்று..நம் மகனும் அம்மா.. அம்மா என்று தானே உயர்த்தி பேசுகிறான்.. மகன் பேசுவது தவறு இல்லையென்றால்.. கணவன் பேசியதும் தவறில்லை தான்.. என்று புரிந்து கொண்டாள்..!!இப்படி புரிந்து கொள்ளும் ஒரு அன்பான மனைவி அமைந்தால் அவளும் ஒரு அம்மா தான் கணவனுக்கு…

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *